வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அக்கா குட்கா, புகையிலைப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை...
மார்த்தாண்டம்: கனரக லாரியின் டயர் வெடித்தது
மார்த்தாண்டம் நகர பகுதி வழியாக கேரளாவுக்கு ஏராளம் கனரக லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் பழைய தியேட்டர் சந்திப்பில் சென்று கொண்டிருந்த கனிம வள லாரியின் முன்பக்க டயர் திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன்...
நித்திரவிளை: கஞ்சா புகைத்த 3 பேர் கைது
நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள புதர் மறைவில் மூன்று வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகே சென்று பார்த்தபோது போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்....
அருமனை: கோயிலில் திருடிய வாலிபரை பிடித்த பொதுமக்கள்
அருமனை அருகே வெள்ளச்சி பாறையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை மீது அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் உடைக்கப்பட்டு அங்கிருந்த நான்கு தூக்கு விளக்குகள், ஒரு குத்துவிளக்கு மற்றும் அம்மனின் நெற்றியில் இருந்த ஒரு தங்க போட்டு ஆகியவை திருட்டு போயிருந்தன....
குமரி: போக்குவரத்து விதி மீறல் – 927 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று (ஜன.3) ஒரே நாளில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 374 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும்...
இரணியல்: விபத்தில் பெண் இன்ஜினியர் படுகாயம்
திருவிதாங்கோடு அருகே உள்ள பூக்கடை பகுதி சேர்ந்தவர் ரசல் மகள் பிரதீஷ்கா தர்ஷினி (25). பிஇ பட்டதாரியான இவர் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று (ஜன.3) காலை இவர் நாகர்கோவில் இருந்து தக்கலை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வில்லுக்குறிச்சாலை...
கருங்கல்: அல்போன்சா கல்லூரி பல்கலைக்கழகச் சாம்பியன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகள் திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்தது. குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவன் ஷரோன் ஜஸ்டஸ் நீளம் தாண்டுதல் போட்டியில்...
திருவட்டார்: ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
108 வைணவ தரங்களில் ஒன்றான திருவட்டார் ஆதி கேசவபெருமாள் கோவிலில் வருகிற 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3:30 மணிக்கு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் மதியம் 1:15 நிமிடங்கள் மட்டுமே கோயில் நடை...
மார்த்தாண்டம்: புதிதாக கட்டும் வீட்டில் கொத்தனார் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் விஜயன் (25). கொத்தனார் இவரது மனைவி சரண்யா (24). இவர்கள் அந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறார்கள். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. விஜயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வின்ஸ்...
அருமனை: குண்டு குழியாக மாறிய சாலை – மக்கள் அவதி
அருமனை பகுதி அருகாமையிலிருந்து அணைமுகம் மற்றும் ஒருநூறாம் வயல் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.
தற்போது இந்த சாலை பெயர்ந்து குண்டு குழியாக காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி குழிகளில்...












