இரணியல் அருகே மது பதுக்கியவர் கைது

0
217

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தேரியில் வந்தபோது போலீசை கண்டதும் ஒருவர் நழுவி செல்ல பார்த்தார். உடனே சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடுத்தேரியை சேர்ந்த ரவி (59) என்பதும், அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 11 மது பாட்டில்கள் மற்றும் ₹640 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரவியை கைது செய்தனர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.