முழு நேர பஸ் சேவை; கிள்ளியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

0
152

கருங்கலில் இருந்து பாலூர்,  தொழிக்கோடு, பரவை, பொத்தியான் விளை,  புதுக்கடை வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87 பி  என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.   இந்த பஸ் கீழ்களம் பகுதி பரவை, பொத்தியான் விளை வழித்தடத்தில் தினமும் காலை, மாலை மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதி ஊர் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் அவதி அடைந்தனர்.   எனவே முழு நேரமும் இந்த பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கிளியூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து எம்எல்ஏ மனு அளித்தார். இதை அடுத்து கருங்கலில் இருந்து மார்த்தாண்டம் வரை உள்ள அனைத்து வழித்தடங்களிலும் முழு நேர பஸ் சேவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பஸ் சேவையின் தொடக்க நிகழ்ச்சி நேற்று கீழ் குளம் பொத்தியான் விளையில்  நடந்தது. கிள்ளியூர் எம் எல் ஏ  ராஜேஷ்குமார் கலந்துகொண்டு முழுநேர பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதி பொதுமக்கள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.