கொல்லங்கோடு நகராட்சியில் பாஜ கவுன்சிலர்கள் போராட்டம்

0
171

கொல்லங்கோடு நகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில்  அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் டாக்டர் ஹெட்கேவர் என்ற ஒரு நூலகத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் பயன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமதிலகம் எந்த முன்னறிவிப்பு இன்றி நூலகத்தை பூட்டியுள்ளார்.   

இதனை கண்டித்து கொல்லங்கோடு நகராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் பத்மகுமார், ஆனந்தன், லட்சுமி பிரியா, சுதா மற்றும் கமலாசனன் நாயர் ஆகியோர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனால் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய அன்றாட பணிகள் முடங்கியது. நேற்று மாலை நகராட்சி அதிகாரிகள்  போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்தது.