Home 2024
Yearly Archives: 2024
இலங்கையிலிருந்து தமிழக மீனவர்களை, படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் தேதி மீனவர்கள் 176 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வரை மீன் பிடித்து விட்டு, கரை திரும்பியுள்ளனர். நெடுந்தீவு அருகே வந்து கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக்...
குறண்டி கோரக்க நாதர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய திருப்பணி.
குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் உள்ள சிறு கோவில்களில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுசீந்திரம் தேரூர் அருகே உள்ள குறண்டி கோரக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கோவிலில் கல் நிலை விடும் பணி நேற்று நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் திருப்பணியை தொடங்கி...
தண்ணீர் வராத ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி வெட்டுகுழி பகுதியில் ஆள்துளை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையிலும் மின்மோட்டார், தண்ணீர் குழாய் அமைத்துமக்கள் பணத்தை ஊராட்சி நிர்வாகம் வீணடித்ததாக நாம் தமிழர் கட்சி முறைகேடு புகார் கொடுத்தது. இதை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் அவதூது புகார் கொடுத்திருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து மேலும் ஆதாரங்களை கொடுத்தனர்.
கொல்லங்கோடு நகராட்சியில் பாஜ கவுன்சிலர்கள் போராட்டம்
கொல்லங்கோடு நகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில் அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் டாக்டர் ஹெட்கேவர் என்ற ஒரு நூலகத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இதன் மூலம் அந்த பகுதி மக்கள் பயன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமதிலகம் எந்த முன்னறிவிப்பு இன்றி நூலகத்தை பூட்டியுள்ளார்.
இதனை கண்டித்து கொல்லங்கோடு நகராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் பத்மகுமார், ஆனந்தன், லட்சுமி பிரியா, சுதா மற்றும் கமலாசனன் நாயர்...
முழு நேர பஸ் சேவை; கிள்ளியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கருங்கலில் இருந்து பாலூர், தொழிக்கோடு, பரவை, பொத்தியான் விளை, புதுக்கடை வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87 பி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கீழ்களம் பகுதி பரவை, பொத்தியான் விளை வழித்தடத்தில் தினமும் காலை, மாலை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதி ஊர் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் அவதி அடைந்தனர். எனவே முழு நேரமும் இந்த பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கிளியூர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க...
இரணியல் அருகே மது பதுக்கியவர் கைது
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தேரியில் வந்தபோது போலீசை கண்டதும் ஒருவர் நழுவி செல்ல பார்த்தார். உடனே சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடுத்தேரியை சேர்ந்த ரவி (59) என்பதும், அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 11 மது பாட்டில்கள் மற்றும் ₹640 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரவியை கைது செய்தனர். இது...
இந்தியா இந்த உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு @ வியன்னா
“இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது பங்களிப்பை இந்தியா வலுப்படுத்தவிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து நேற்று (ஜூலை 10) ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர்...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 121 ரன்னுக்கு சுருண்டது மே.இ.தீவுகள் அணி
இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மைக்கேல் லூயிஸ் 27, கவேம் ஹாட்ஜ் 24,அலிக் அத்தானஸ் 23, அல்சாரிஜோசப் 17 ரன்கள் சேர்த்தனர்.கேப்டன் பிராத்வெயிட் 6, கிர்க் மெக்கென்சி 1, ஜேசன் ஹோல்டர் 0, ஜோஷ்வா டி சில்வா 0, ஜெய்டன் சீயல்ஸ்...
விம்பிள்டன் 2024: அரை இறுதியில் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக்ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 9-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோத இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னதாக காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அலெக்ஸ் டி மினார் அறிவித்தார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால்...
சிபிஐ பெயரில் லக்னோவில் வித்தியாசமான சம்பவம்: வீடியோ கால் பேசி கவிஞரை பாட சொல்லி மிரட்டிய கும்பல்
உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் காவல் நிலையத்தில் கவிஞர் நரேஷ் சக்சேனா புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை 7ஆம் தேதிமாலை 3 மணியளவில் கவியரங்கம் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற நான் புறப்பட்ட சமயத்தில்எனது அலைபேசியில் வீடியோ கால் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், ஆதார் அட்டையைநான் தொலைத்துவிட்டேனா என்றுகேள்வி கேட்டார்.
எனது வங்கிக் கணக்கில் மும்பையில் யாரோ ஒருவர் பல கோடி ரூபாய்க்குப் பண மோசடி செய்திருப்பதாகவும், அது தொடர்பாக மும்பை காவல்நிலையம் வழக்குப் பதிவு...














