Home 2024
Yearly Archives: 2024
“டோக்கியோ பாணியில் பாரிஸிலும் விளையாடினால் அதிதி பதக்கம் வெல்வார்” – கபில் தேவ்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிவரை முயற்சித்து நான்காம் இடம் பிடித்து ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மிஸ் செய்தார் இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்.
இந்த சூழலில் இந்திய கோல்ஃப் சங்க தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் தெரிவித்தது. “டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டில் விளையாடிய அதே பாணியில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அதிதி விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கும், கோல்ஃப் வீரர்களுக்கும் ஃபார்ம் மிகவும் முக்கியம். அதே ஃபார்மில் அதிதி விளையாடினால் பதக்கம் வெல்லும்...
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை பெண்களே எடுக்க அமைச்சர் நட்டா வலியுறுத்தல்
நவீன கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளன. இவை பரவலாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் இவை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. இந்த உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
நவீன கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளன. இவை பரவலாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள...
தீவிரவாதிகளுக்கு நிதி: யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ மேல்முறையீட்டு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா நேற்று விலகினார்.
காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததால் இவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளில் தேசியபுலனாய்வு முகமை கைது செய்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட யாசின் மாலிக்குக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. யாசின் மாலிக் செய்த குற்றத்தால் ராணுவ வீரர்கள்பலர் இறந்துள்ளனர். இதற்கு அவருக்கு...
“ஆதார் அட்டையுடன் வந்தால் மட்டுமே சந்திப்பு”- தொகுதி மக்களுக்கு பாஜக எம்.பி கங்கனா நிபந்தனை
தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால் ஆதார் அட்டையுடன் வருமாறு இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள கங்கனா ரனாவத், "இமாச்சல பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் என கூறுகிறேன். மேலும், என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதிகளின் பிரச்சினைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் சாமானிய தொகுதி மக்கள் நிறைய சிரமங்களை...
பணமோசடி வழக்கு: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ நாகேந்திராவிடம் அமலாக்கத் துறை விசாரணை
வால்மீகி கார்ப்பரேஷன் ஊழல் வழக்கு தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வுமான பி.நாகேந்திரனை தடுப்புக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், "நான் எனது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறேன். இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.
முன்னதாக கடந்த மே 21-ம் தேதி பெங்களூரு மாநகராட்சியின் கணக்கு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டார். அவர் விட்டுச்சென்ற தற்கொலை குறிப்பில், பல்வேறு...
‘உண்மையின் வெற்றி…’ – கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு
பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதே மோசடி தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கால் கேஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சித் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி பொதுசெயலாளர் சந்தீப் பதக் கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு, ஜாமீன் வழங்கியிருப்பதன் மூலம் மதுபானக் கொள்கை ஊழல் என்பதை நீதிமன்றம் தகர்த்துள்ளது. இப்போது பாஜக இந்த...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத அண்ணா பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் மனோகரன் அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியபோது, உதவிப்பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாகக்கூறி, அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மெமோவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட...
அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் சிவசங்கர் தகவல்
தமிழகத்தில் தற்போதைக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பேருந்துகளில், ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப்போல செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்டோர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்படி...
வழக்கு என சொல்லி என்னை மிரட்ட முடியாது: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை பதில்
எல்லோரையும் மிரட்டுவதுபோல வழக்கு என சொல்லி என்னையும்மிரட்ட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு விவரம்: எல்லா வழக்குகளையும் பார்த்தவன். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின்தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை.
எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள் சாதாரண நகர காவல்துறை, இதற்கு மேல் உயர் அதிகாரிகள், சிபிசிஐடி, சிபிஐ வலுவான...
நாதக பிரமுகர் சாட்டை துருமுருகன் கைது – நீதிமன்ற காவலை நிராகரித்து நீதிபதி உத்தரவு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது,நாதக வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், பட்டியலின மக்கள் குறித்தும் சாட்டைமுருகன் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, திருச்சிமாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் புகார் அளித்திருந்தார். இதன் பேரில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர்.
இதற்கிடையில், தென்காசி மாவட்ட ஆட்சியர்...














