“டோக்கியோ பாணியில் பாரிஸிலும் விளையாடினால் அதிதி பதக்கம் வெல்வார்” – கபில் தேவ்

0
121

டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிவரை முயற்சித்து நான்காம் இடம் பிடித்து ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மிஸ் செய்தார் இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்.

இந்த சூழலில் இந்திய கோல்ஃப் சங்க தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் தெரிவித்தது. “டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டில் விளையாடிய அதே பாணியில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அதிதி விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், கோல்ஃப் வீரர்களுக்கும் ஃபார்ம் மிகவும் முக்கியம். அதே ஃபார்மில் அதிதி விளையாடினால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம். சர்வதேச தரத்திலான கோல்ஃப் மைதானங்கள் இந்தியாவில் வேண்டும். இந்த விளையாட்டு சார்ந்த தொடர்கள் மற்றும் வாய்ப்புகளை இந்தியாவில் அதிகரிக்க ஸ்பான்ஸர்கள் வேண்டும். இந்தியாவில் உள்ள கோல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கு உதவ முயற்சிப்பேன்” என அவர் தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் இறுதிச்சுற்று வரை விளையாடி இருந்தார் அதிதி. அதில் வெண்கலம் வென்ற நியூஸிலாந்தில் லிடியாவை காட்டிலும் 1 ஸ்ட்ரோக் தான் பின்தங்கி இருந்தார். வெள்ளியை ஜப்பான் வீராங்கனை மோன் இனாமி மற்றும் தங்கத்தை அமெரிக்காவின் நெல்லியும் வென்று இருந்தனர். இந்த முறை தனது பதக்க வாய்ப்பை அதிதி உறுதி செய்வார் என நம்புவோம்.