Home 2024
Yearly Archives: 2024
முதல்வர் காப்பீட்டு திட்டம்: புதிதாக 84 தனியார் மருத்துவமனை இணைப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 1,513 வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட 8 வகையான உயர் அறுவை சிகிச்சைகளும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 854 அரசு...
“தமிழக மாணவர்கள் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு @ திருவள்ளூர்
“தமிழக மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தொடங்கிவைத்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத்...
“தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உறுதியேற்போம்” – அன்புமணி
தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த காமராசரின் 122-ஆம் பிறந்த நாளில் உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான்.
தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று...
நேபாளத்தில் நிலச்சரிவு | 60+ நபர்களுடன் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்
மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது....
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என அழைத்த ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்கள் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என சொல்லி அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில் பைடன் பங்கேற்றார். அப்போது ஜெலன்ஸ்கியை பேச அவர் அழைத்தார். அப்போது ‘புதின்’ என அவரை சொல்லி...
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான ஐ.நா சபையின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது.
ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட...
23 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் கொலம்பியா | கோபா அமெரிக்கா தொடர்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின.
39-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஜெபர்சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 44-வது நிமிடத்தில் டேனியல் முனோஷ் உதவியுடன் பந்தை பெற்ற கொலம்பியாவின் ரிச்சர்டு ரியோஷ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால்...
கார் பந்தய அணியை வாங்கினார் சவுரவ் கங்குலி
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.
இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை,...
ஐபிஎல் கிரிக்கெட்டால் இங்கிலாந்தின் சராசரி வீரர்களும் பணக்காரர்கள் ஆனார்கள்: பாய்காட் கிண்டல்
ஐபிஎல் பணமழை டி20 ரியால்டி ரக கிரிக்கெட் ஷோவினால் சாதாரணது முதல் சராசரி இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறொரு பயனும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லை என்று ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக கிண்டல் தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டத்தை பரிகசிக்கும் விதமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் ஜெஃப்ரி பாய்காட்.
இது குறித்து ஆங்கில பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக நாம் கண்டதெல்லாம் கரீபியனில் நடந்த டி20...
“நான் எதிர்கொண்ட சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர்தான்” – ஜேம்ஸ் ஆண்டர்சன்
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிதான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டி. அவர் 700 விக்கெட்டுகளைக் கடந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்டர் என்று கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஆண்டர்சன் கூறியதாவது: சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர் என்றே கூறுவேன். அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியை வகுக்க முடிந்ததாக நான் கருதவில்லை. சச்சின் இறங்கும் போதெல்லாம் நான் நினைப்பது ‘மோசமான பந்துகளை அவருக்கு...














