Google search engine
Home 2024

Yearly Archives: 2024

புற்றுநோயால் அவதிப்படும் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி உதவி

புற்றுநோயால் அவதிப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது. அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான உதவியை பிசிசிஐ வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் சந்திப் பாட்டீல் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அன்ஷுமன் கெய்க்வாட் சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக ரூ.1 கோடி நிதியுதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது....

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: கனடாவை வீழ்த்தி உருகுவே 3-வது இடம்

கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடரின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா அணியை உருகுவே வீழ்த்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் உருகுவே 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது. புகழ்பெற்ற கோபா அமெரிக் காகால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி கண்ட கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நேற்று நார்த் கரோலினாவிலுள்ள சார்லோட் மைதானத்தில் மோதின. 3-வது இடத்துக்கான ஆட்டமாக இருந்தாலும் இந்த ஆட்டம் மிகவும்...

யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்: இங்கிலாந்தை ஃபைனலில் வீழ்த்தியது

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் கவனம் விளையாடின. இருந்த போதும் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின். இந்த சூழலில் இரண்டாவது...

கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3கோடி கொள்ளையடிக்கப்பட்ட தாக புகார் எழுந்தது. இந்த ஊழலுக்கு உதவாததால் ஆண யத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் கடந்த மே மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடந்த சிறப்பு புலனாய்வு பிரிவு...

தமிழகத்துக்கு காவிரியில் 8,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீரை திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டினார். நேற்று மாலை நடந்த...

இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை உயர்த்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்

இந்திய ஊடகங்கள் உலகளவில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் (இந்திய செய்தித்தாள் சங்கம்) கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழிகளுக்கு தனதுசமூக ஊடகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கான பயணத்தில் செய்தித்தாள்களின் பங்கு மிக முக்கியமானது. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை...

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்; கொறடாவும் அறிவிப்பு

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமை கொறடா மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் 2 கொறடாக்கள் நியமனம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற...

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அடக்குமுறைகள்: நேரு காலம் முதல் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டது பாஜக

நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ஒவ்வொரு ஆண்டும் அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் மட்டுமின்றி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுதன்ஷு திரிவேதி டெல்லியில் கூறியதாவது: அவசர நிலை காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. காவல்துறையால் மக்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் சட்ட நிவாரணம் பெறமுடியாது. இந்திரா...

போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் நோட்டீஸ்: ஜூலை 24-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

தொழிலாளர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனர். இதுதொடர்பான 3-ம் கட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து...

அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்க தடை

தமிழகத்தில் அரசு திட்டங்களின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்கக் கூடாது என பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கான பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள் தற்காலிக மின்இணைப்புக்கான மின்கட்டணத்தை மாதம்தோறும் சரிவர செலுத்துவது இல்லை. மேலும், அரசு பணி என்பதால் அந்த மின்இணைப்புகளில் மின்விநியோகத்தை அதிகாரிகள் துண்டிப்பது இல்லை. தற்காலிக இணைப்புக்கு செலுத்திய டெபாசிட் தொகையை விட மின்கட்டணம் அதிகம் இருக்கும்பட்சத்தில், பணிகளை முடித்து விட்டு மின்கட்டணம் செலுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விடுகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று நிலுவை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...