Home 2024
Yearly Archives: 2024
மாற்றுத் திறனாளி கிடையாது, இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படித்தவர் பூஜா: விசாரணையில் புதிய தகவல்கள் அம்பலம்
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி கிடையாது என்றும், ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பு படித்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் பூஜா மனோரமா திலீப்கேத்கர். இவர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கான (ஓபிசி)இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரியும் அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார்...
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் மாயம்? – விசாரணை நடைபெறாதது ஏன் என அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி
கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படாதது ஏன் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று மும்பை வந்திருந்தார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டில் சந்தித்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. இதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பற்றிய குறிப்புகளும் உள்ளன. எனவே அதேபோன்ற...
எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 986 மருந்தாளுநர்களுக்கு பணி கோரி சுப்ரியா சாஹுவிடம் மனு
தமிழகத்தில் 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2022 ஆகஸ்டில் வெளியிட்டது. இதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
2023 ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பரில் முடிந்துவிட்டது. ஆனால், 10 மாதங்கள் ஆகியும் தேர்வு செய்யப்பட்ட 986 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை.
எனவே, அவர்களுக்கு விரைவாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை விரைவாக நிரப்ப...
காலை உணவு திட்டம் குறித்த அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்
காலை உணவு திட்டம் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ‘காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.
எனவே, பள்ளி மாணவர்களுக்கு வெறும், சாப்பாடு, இட்லி, தோசை என கொடுக்காமல், சிறுதானியங்கள், முட்டை உள்பட சத்தான உணவுகளை வழங்க வேண்டும். இதில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், நிதி...
மின் கட்டண உயர்வு ஏன்?- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க அறிக்கையின் விவரம் வருமாறு: கடந்த 2011-12 ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்...
கோவை இளைஞர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்: எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் கடந்த 2016 ஏப்ரல் 3-ம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரத்தினபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், கார்த்திக், மகேந்திரன், சுரேஷ், கவாஸ்கான், ஜெய்சிங், நவீன், கருப்பு கௌதம், விமல்குமார், விஜய், சைமன் கிறிஸ்டோபர், கௌதம் மற்றும் கலைவாணன்...
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு: ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
கர்நாடக அணைகளில் இருந்துதிறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம் தேதி காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக பதிவானது. ஆனால், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 4,500 கனஅடியாக குறைந்தது.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது....
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?
அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இத்தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி: 42 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது.4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டி ஹராரே மைதானத்தில்...
பிரான்ஸில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு வெண்கலம்
பிரான்ஸில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் - சரண்யா தம்பதியின் மகன் ப.இனியன். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இனியன், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்ற இனியன் 2,513 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டரானார்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் நடந்த செஸ்...














