Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கர்நாடக அரசை கண்டித்து டெல்டாவில் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கத்தினர் 1,600 பேர் கைது

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசையும், நீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாக குற்றம்சாட்டி மத்திய அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்...

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்: திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர் இன்று (ஜூலை 17ம் தேதி) காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு,...

காமராஜருக்கு நாம் தமிழர் கட்சி மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் மாவட்ட தலைவர் சத்தியதாஸ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சீலன் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள். இதில் ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற குமரி ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நலிவடைந்த பிரிவினர் நாகர்கோவில் வாழ்விட அலுவலகத்தை அணுகலாம். தகவலுக்கு 9994042100, 8072599455 எண்களை தொடர்பு கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள்...

ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்

நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆன்மிகம் தனக்குப் பலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், வாழ்க்கை உங்கள் மீது வீசும் அனைத்தையும் சமாளிக்க...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியா ரூ.470 கோடி செலவழிப்பு

33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல்லின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்துக்காக மட்டும் மத்திய அரசு ரூ.96.08 கோடி செலவிட்டுள்ளது....

நியூயார்க்கில் தேர் திருவிழா நடைபெற உதவிய ட்ரம்ப் உயிரை காப்பாற்றிய ஜெகந்நாதர்: இஸ்கான் தலைவர்

நியூயார்க் நகரில் தேர் திருவிழா நடைபெற உதவிய டொனால்டு ட்ரம்ப் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார் என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞரை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து அமெரிக்காவின் புலனாய்வு குழுவினர் விசாரிக்...

பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும் ராகுல்: பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ட்ரம்ப் மீதான வெறுப்புணர்வின் காரணமாக தாமஸ் மேத்யூ என்பவர் தனிநபராக அவரை கொலை செய்ய முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்ற கருத்தை மையமாகவைத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதேபோல இந்தியாவில் ‘அரசமைப்பு சாசனத்தை காப்பாற்றுவோம்’ என்று எதிர்க்கட்சிகள் கபடநாடகமிட்டு...

புதிய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு

சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராக கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), நாட்டின் புதிய வெளியுறவு செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வெளியுறவுத் துறையின் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் அவருக்கு ஜூலை 14 வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் வினய் குவாத்ரா நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய வெளியுறவு செயலாளராக விக்ரம் மிஸ்ரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியானவிக்ரம் மிஸ்ரி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். அதற்கு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...