Home 2024
Yearly Archives: 2024
தங்கத்தை சுடுமா இந்திய படை? – பாரிஸ் ஒலிம்பிக் 2024
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் 26-ம்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 16 விளையாட்டுகளில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சுடுதலில் 21 பேர் களமிறங்குகின்றனர். துப்பாக்கி சுடுதல்அணி குறித்து ஓர் பார்வை..
ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 4 பதக்கங்கள் வென்றுள்ளது. முதன்முறையாக 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்பின்னர் 2008-ம்...
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் பதவி விலகல்
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
கடந்த 2016-ம்ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக சவுத்கேட் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் தொடர்ச்சியாக இரு முறை யூரோ கோப்பை தொடரின்...
போலி சான்றிதழ் சர்ச்சை: பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பயிற்சி நிறுத்திவைப்பு
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பூஜா கேத்கருக்கு மகாராஷ்டிர கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின்...
ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்: மணல் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் உதவியாளர் வழக்கறிஞர் பிரணவ் சச்தேவ் கூறியதாவது:
சட்டவிரோத...
பத்திரங்களாக மாறும் கோயில் தங்க நகைகள்: தெலங்கானா அரசு முடிவு
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் காணிக்கைகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் அவை பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதுடன் வட்டியும் கிடைக்கும் என்று மாநில...
உத்தராகண்டில் புனித ஏரி அருகே கோயில் கட்டிய சாமியார்: பொதுமக்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள பனிமலை அருகே தேவி குந்த் என்ற புனித ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே சுதேர்துங்கா ஆறு பாய்கிறது. பனிமலையிலிருந்து வரும் நீரால் உருவான ஏரி என்பதால் தேவிகுந்த் ஏரியை இப்பகுதி மக்கள் புனித ஏரியாக போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரிக்கு அருகே பாபா சைதன்யா ஆகாஷ் என்ற சாமியார், சட்டவிரோதமாக சிறிய அளவிலான கோயில் கட்டியுள்ளார். இதில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தபோது தனக்கு...
வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தேர்தல் முடிவில் அதிருப்தி தெரிவிக்கும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவுகளை சரிபார்ப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்ஓபி) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதிருப்தி வேட்பாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கும் வழிவகை உள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுகளை சரிபார்க்க 8 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தேர்தல் முடிவு களை சரிபார்க்க 3 வேட்பாளர்களும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், அதிருப்தி வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில்...
உதவித் தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகைக்கு 14 மாதங்களாக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும்மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமை வகித்து கூறியதாவது: தமிழக அரசின் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை எந்தவித...
உயர் கல்வித் துறை சார்பில் ரூ.53 கோடியில் கட்டிடங்கள் திறப்பு
உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கலில் உள்ள கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதியவகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக கட்டிடங்களில் இயங்கிவந்த புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 12.40 கோடியிலும், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியிலும், திருச்சி, மணப்பாறை அரசு கலை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 10 பேர் மீண்டும் பூந்தமல்லி சிறையில் அடைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மேலும் 10 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33)...














