Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உ.பி.அரசுக்கு மாற்றம்

கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உத்தர பிரதேச அரசுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது 100-க்கும் மேற்பட குற்ற வழக்குகள் இருந்த நிலையில், உத்தர பிரதேச காவல் துறை இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக இவர்களை காவல் துறை அழைத்துச் சென்றபோது, கூலிப்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்திலேயே ஆதிக் அகமதும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும்...

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: அண்ணா பேச்சைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு...

ரூ.100 கோடி நில மோசடி புகாரில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் அடைப்பு

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுஉள்ளார். கரூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தனக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், ஆதரவாளர் பிரவீன் உள்ளிட்டோர் மிரட்டி பத்திரப் பதிவு செய்ததாக வாங்கல் போலீஸில் புகார் கொடுத்தார். இதேபோல, இந்த சம்பவத்தில் போலி...

ஏழைகளுக்கு 6.52 லட்சம் இலவச பட்டா: வருவாய்த் துறை சாதனைகள் குறித்து தமிழக அரசு பெருமிதம்

வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலேயேரால் உருவாக்கப்பட்டு ஒரு காலத்தில் நிலவரி வசூலில் மட்டும் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை, பொது நிர்வாகம், மக்கள் நலன் காக்கும் துறையாக உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், 6,52,559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் மூலம், 2 ஆண்டுகளில் 41,81,723 பட்டா மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. மாநிலத்தில் மொத்தம் உள்ள186 நகரங்களில் 179 நகரங்களுக்கான...

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசின் நிதியுதவி மீண்டும் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்தநிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள், விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றியாக வேண்டும். இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இதன்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இத்திட்டத்தில் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம்,கேரளா மாநிலங்கள் இணையவில்லை. ஆனால், தமிழகம் மட்டும்பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அதிமுகவிலிருந்து நீக்கம்

0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்களான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி, செம்பியத்தை சேர்ந்த ஹரிகரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மலர்கொடியின் கணவர் பிரபல தாதாவாக வலம் வந்தவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் சதீஷ் திமுக நிர்வாகி ஒருவரின் மகன்...

‘இப்போ நல்லா தமிழ் பேசறேன்’ – நடிகை சைத்ரா மகிழ்ச்சி

கன்னட நடிகையான சைத்ரா ஜே.ஆச்சார், டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி, பிளிங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘சித்தார்த் 40’ படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் கூறும்போது, “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச்...

கார்த்தியின் ‘சர்தார் 2’-வில் இணைந்தார் எஸ்.ஜே.சூர்யா

கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது....

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர்: 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர்.. இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல். இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் உறுதி செய்துள்ளது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே...

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாள் முன்பு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற தாமஸ் மேத்யூ: புதிய தகவல்கள் வெளியீடு

கடந்த 13-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தாமஸ் மேத்யூ என்பவர் ட்ரம்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 8 குண்டுகள் சீறிப் பாய்ந்த நிலையில், ஒரு குண்டு ட்ரம்பின் வலது காதை துளைத்துச் சென்றது. நூலிலையில் அவர் உயிர் தப்பினார், சுதாரித்துக் கொண்டபாதுகாப்புப் படை வீரர்கள், தாமஸ்மேத்யூவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தி வரும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...