Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.இதன்படி, வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.1,020 ஆக...

4 பல்கலை. துணைவேந்தர் பதவி காலி: பணிகள் பாதிக்கப்படுவதாக ராமதாஸ் விமர்சனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தொடர் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலும், தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உபரிநீரைத் திறக்கும் வடிகாலாகவே, தமிழகத்தை கர்நாடகா பார்க்கிறது.காவிரி துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை ரோகிணி ஆணையம் சமர்ப்பித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட...

6 மருத்துவ கல்லூரிகளுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணையத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இதுதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.இந்நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய...

ஓமன் மசூதி துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட 6 பேர் உயிரிழப்பு; 28 பேர் காயம்

கடந்த ஜூலை 15-ம் தேதி (திங்கள்) இரவு, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஷியாமுஸ்லிம்களுக்கான இமாம் அலிமசூதி அருகில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு துப்பாக்கி சூடுநடத்தியது. இதில் ஒரு இந்தியர், நான்கு பாகிஸ்தானியர்கள், காவல்துறை அதிகாரி ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின்போது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ்...

பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்!

33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்த சூழலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் தேதி, நேரம் முதலியவை வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்தில் 29 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். ஆடவர் 18, மகளிர் 11 என தடகள வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை உள்ளது.துப்பாக்கி சுடுதல் 21, ஹாக்கி 19, டேபிள்...

பாரிஸ் ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்தியாவின் பொற்காலம் திரும்புமா?

இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட விளையாட்டான ஹாக்கி, உலகின் முதன்மையான விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1908-ம் ஆண்டுலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சர்வதேச விளையாட்டு கட்டமைப்பு இல்லாததால் 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கிலிருந்து ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டது. இதன் எதிரொலியாகவே பிரான்ஸ் தலைநகரான பாரிஸில சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இருந்து ஹாக்கி நிரந்தரமாக இடம் பெற்றது.இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்திய ராணுவத்துக்கு...

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு: எதிர்ப்பால் மசோதா நிறுத்திவைப்பு

கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தனர்.இந்நிலையில்...

மக்களவைத் தேர்தல் பின்னடைவால் உ.பி. மாநில நிர்வாகிகளை மாற்ற பாஜக திட்டம்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அங்கு 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி அதிகஇடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2017 மற்றும் 2022-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. வரும் 2027-ல் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.இந்த சூழலில் மக்களவைத் தேர்தலில்...

பொது தேர்வில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லி தந்து மோசடி: ராஜஸ்தானில் ஆசிரியர்கள் பிடிபட்டனர்

ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல்வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.இது தொடர்பாகத் தேர்வு கண்காணிப்புக் குழு தலைவர் நிஷி ஜெயின் கூறுகையில்: குறிப்பிட்ட பள்ளியில் தேர்வின்போது மோசடி நடந்துவருவதாகஎங்களுக்குத் துப்பு கிடைத்தது....

புரி ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தில் 7 அடி உயர பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற கருவூல அறை உள்ளது. ஒடிசா அரசு அனுமதி வழங்கியதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ம் தேதி கருவூல அறை திறக்கப்பட்டது. அப்போது அங்கு 5 முதல் 7 சிறிய பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரத்ன பண்டாரை திறப்பதற்காக அமைக்கப்பட்ட 11 உறுப்பினர் கொண்ட குழுவின் தலைவர் விஸ்வநாத் ரத் கூறுகையில், ‘‘ரத்ன பண்டார் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்ததால், அதில் இருந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...