Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாரிஸ் ஒலிம்பிக்: தடகளத்தில் தடம் பதிக்குமா இந்தியா?

33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் தடகளத்தில் இந்தியாவில் இருந்து 29 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களே வென்றுள்ளது. 1900-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகியவற்றில்...

4.2 ஓவர்களில் 50 ரன்கள்: இங்கிலாந்து சாதனை

இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியானது 4.2 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்களை கடந்த தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4.3 ஓவர்களில் 50 ரன்கள் விளாசியிருந்தது.

மண்டல அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மண்டல அளவிலான போட்டி நேற்று தொடங்கியது. இதை நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா உயர்மட்ட செயல்திறன் இயக்குநர் ஹெர்மன் குரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா ஜூனியர் தென்மண்டல சாம்பியன்ஷிப்பில் ஆடவர்...

வழக்கறிஞர்களுடன் உரையாட கூடுதல் நேரம் கோரிய கேஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் உள்ளார். அவர் வாரத்துக்கு இருமுறை தனது வழக்கறிஞர்களுடன் உரையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக இரண்டு முறை இணையம் வழியாக உரையாட அனுமதி கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. கேஜ்ரிவாலின் மனுவை திஹார் சிறை அதிகாரிகள் தரப்பும், அமலாக்கத் துறையும் எதிர்த்து வாதிட்டன.“திஹார் சிறையில் பல கைதிகள் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள்...

சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கல்வியில் தேசிய சராசரியைவிட தமிழகம் முன்னிலை: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது.இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை...

சமய பணிகளை விடுத்து பணம் சம்பாதிக்கும் துறவிகள் மீது அகாடா பரிஷத் நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-ல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி. மாநில அரசுடன் இணைந்து அகில இந்திய அகாடா பரிஷத்தும் செய்து வருகிறது. இந்த அமைப்பானது அனைத்து வகை துறவிகளின் தலைமை சபையாக செயல்படுகிறது.நாடு முழுவதிலும் இந்த அமைப்பில் உள்ள புனிதர்கள், மகாமண்டலேஷ்வரர்கள், மடாதிபதிகள் என பலவகை துறவிகள் குறித்து ஏப்ரல் 1 முதல் ரகசிய விசாரணை...

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 2-வது முறையாக திறப்பு

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டார் நேற்று 2-வது முறையாக திறக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரை, புனரமைப்பு பணிக்காக திறக்க மாநில அரசின் அனுமதியை தொல்பொருள் ஆய்வுத்துறை கோரியது. இதையடுத்து 46 ஆண்டுகளுக்குப் பின் ரத்ன பண்டார் கடந்த கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. அங்கு பழங்கால 7 சிறிய சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு பூஜை செய்யப்பட்டு தற்காலிக பெட்டக அறைக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில், ஜெகந்நாதருக்கு வழிபாடு நடத்திய பின்,...

காவிரியில் தமிழகத்துக்கு 75,000 கன அடி நீர் திறப்பு: 114 அடியை எட்டியது கிருஷ்ணராஜ சாகர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 36 ஆயிரத்து 672 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி...

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை

நில மோசாடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரதுசகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாகநேற்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பல கோடிரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.95 லட்சம் மட்டுமே...

ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை வேறு இடத்துக்கு மாற்ற முடியுமா? – உயர் நீதிமன்றம்

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் பழமையான ஸ்ரீரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில், சென்னைமெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக, கோயிலின் ராஜ கோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ‘ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக கோயில்ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், எனக்கோரியிருந்தார். அதன்படி இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...