தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மண்டல அளவிலான போட்டி நேற்று தொடங்கியது.
இதை நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா உயர்மட்ட செயல்திறன் இயக்குநர் ஹெர்மன் குரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா ஜூனியர் தென்மண்டல சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக அணிக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக மகளிர் அணிக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.