இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியானது 4.2 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்களை கடந்த தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4.3 ஓவர்களில் 50 ரன்கள் விளாசியிருந்தது.