Home 2024
Yearly Archives: 2024
எஸ்சி, எஸ்டி நலப்பள்ளிகளில் படித்து ஐஐடி, என்ஐடி-க்கு 8 மாணவர்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் பயின்று முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயர்கல்வி பயிலும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஜெஇஇ, சிஎல்ஏடி போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐஐடி யில் பயில விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.பார்த்தசாரதி, திருச்சி என்ஐடி யில் பயில சேலம் மாவட்டம், கரியகோவில்வலவு,...
சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது 23-ல் விசாரணை
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து அவரதுதாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பெண் போலீஸாரை அவதூறாக பேசியது மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்து பொதுமக்களை போராடத் தூண்டியது உள்ளிட்ட வழக்குகளில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா,...
கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான முதல் வேலை உத்தரவை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் வழங்கினார், உடன் துணைத் தலைவர். மனோ சிவா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர். ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது
துவக்க விழா நேற்று மாலை நடந்தது அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின் முதல் டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைதம்பி முன்னிலை வகித்தார் தொடர்ந்து பொருட்காட்சி மைதானத்தில் உள்ள விஎல்சி மண்டபத்தில் துவக்க விழா நடந்தது
அமைச்சர் மனோ தங்கராஜ் பக்க காட்சியை திறந்து வைத்து...
ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதைதொ டர்ந்து அங்கு மழைநீர் ஓடை அமைக்க நெடுஞ்சாலை துறைக்கு ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று அங்கு மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த...
அமெரிக்க அதிபர் பைடனுக்கு கரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று அறிவித்துது.
இது குறித்து வெள்ளைமாளிகை செயலாளர் கரைன்ஜேன் பெரிவிடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல்பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் நேற்று பங்கேற்றார். அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவருக்கு லோசான அறிகுறிகள் உள்ளன. அவரது சுவாசம் இயல்பு நிலையில் உள்ளது. உடல் வெப்ப நிலை, பல்ஸ் ஆக்ஸிமெட்ரி அளவுகளும் இயல்பாக உள்ளன. அவர் ஏற்கெனவே...
டெல்லி டு சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.
“டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் ஏஐ-183 தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தூக்கு (UNKL) திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து நாங்கள் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை தான்...
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.3 ஆக பதிவு
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராகப் பதிவானது என்று ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கமானது சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.முன்னதாக கடந்த ஜனவரியில், வடக்கு சிலியின் டாராபாக்காவில்...
“என் பக்கம் கடவுள் இருந்தார்” – துப்பாக்கிச் சூட்டுக்குப் பிந்தைய முதல் உரையில் ட்ரம்ப் உருக்கம்
“என் பக்கம் கடவுள் இருந்தார்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னரான முதல் உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது...
“ட்ரம்ப் ஒரு ஹீரோ, கிளாடியேட்டர்” – WWE வீரர் ஹல்க் ஹோகன் புகழாரம்
மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற WWE வீரர் ஹல்க் ஹோகன், “என்னுடைய ஹீரோ, கிளாடியேட்டர் ட்ரம்ப் உதவியுடன் அமெரிக்காவை மீட்போம். அவர் ஒரு உண்மையான அமெரிக்கர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. காதில் காயத்துடன் தப்பித்த அவர், அதன் பிறகு முதல்முறையாக மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரபல முன்னாள் WWE வீரர் ஹல்க் ஹோகன் சிறப்பு...













