Home 2024
Yearly Archives: 2024
இங்கிலாந்து அணியுடன் 2-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிதானமாக விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆலி போப் 167 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசினார். பென் டக்கெட் 71, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் சேர்த்தனர்.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜெய்டன்...
ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர்: சென்னையில் நாளை தொடக்கம்
தமிழகத்தில் இருந்து அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக முதலில் சர்வதேச மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
2023-ம் ஆண்டு அக்டோர் 16-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி வரை நடத்தப்பட்ட 20 தொடர்களின் வாயிலாக 2 பேர் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் வாங்கியுள்ளனர், மேலும் 8 பேர் ஐஎம்...
கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்கள் குறித்த உத்தரவுக்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு
கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உத்தரப் பிரதேச அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் வண்டிகள், கடைகளில் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும்...
“பொய்களால் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்” – மோடியின் ‘வேலைவாய்ப்பு’ தகவலுக்கு கார்கே காட்டம்
எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்” என்று கடுமையைாக சாடியுள்ளார்.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை பற்றி பொய்யான கதைகளைப் பரப்பியவர்களை அமைதியாக்கியுள்ளது என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும்...
வங்கதேச போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கண்டெடுப்பு
திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டம் ரான்குடியா பகுதியில் நேற்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
தகவல் அறிந்து வந்த போலீஸார் பள்ளத்தில் இருந்து மொத்தம் 27 வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர். அவை 1971 வங்கதேசப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எனத் தெரிகிறது.
வங்கதேச சுதந்திரப் போராட்ட முக்தி பாஹிணி அமைப்பினர் இந்த வெடிகுண்டுகளை இங்கு புதைத்து வைத்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரி அனந்த தாஸ்கூறும்போது, “இந்த வெடிகுண்டு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை. வெடிகுண்டுகளின்...
என்னை கொல்ல சதி நடக்கிறது: ஒவைசி எம்.பி. குற்றச்சாட்டு
என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி செய்தியாளர் களிடம் பேசியதாவது: முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் பழி வாங்கும் தோரணையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.டெல்லியில் உள்ள எனது வீட்டில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. உத்தர பிரதேச பிரச்சாரத்திற்கு செல்லும் என் மீது...
ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு
அமெரிக்க ராணுவத் தளவாட நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,“பிரதமர் நரேந்திர மோடியை லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் சந்தித்து பேசினார். இந்தியா –அமெரிக்கா இடையிலான விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் முக்கிய பங்குதாரராக உள்ளது.இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம் என்ற தொலைநோக்கை நனவாக்குவதில் இந்த...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்: சத்தீஸ்கர் அமிதி பல்கலை. வேந்தர் செல்வமூர்த்தி நம்பிக்கை
இளைஞர்களால் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்று சத்தீஸ்கர் அமிதிபல்கலை. வேந்தர் செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமிதி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கல் அமைப்பின் தலைவரும்,சத்தீஸ்கர் அமிதி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான செல்வமூர்த்தி, சிறந்தமாணவர்களுக்கு 38 தங்கப்பதக்கங் களை வழங்கி கவுரவித்தார்.ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், மருத்துவம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறைகளில் 780 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் செல்வமூர்த்தி பேசியதாவது: நம்முடைய...
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 410 பேருக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில்...
மக்களவை தேர்தல் தோல்வி குறித்து 23 தொகுதிகளில் அதிமுக ஆலோசனை நிறைவு
மக்களவைத் தேர்தல் முடிவு தொடர்பாக 23 தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை நேற்று நிறைவடைந்தது. 24-ம் தேதி முதல் இதர தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அறிவதற்காக மக்களவைத் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கடந்த 10-ம் தேதி முதல் கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.நேற்று 8-வது நாளாக விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி...














