Google search engine
Home 2024

Yearly Archives: 2024

இறச்சகுளம் ஊராட்சியில் அலங்காரத் தரை அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சி அம்மன் கோவில், வடக்கு தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணியினை நேற்று நடைப்பெற்றது. இதனை இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் உடனிருந்தனர்.

ஆதிதிராவிடர் நலக்குழு புதிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. எனவே புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்டு, சமூக அக்கறை கொண்ட விருப்பமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நபர் குற்ற பின்னணி மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர்கள்...

பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில்  கொல்லங்கோடு போலீசார் ஆதர்ஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.இதன் காரணமாக சம்பவதினம் அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே சென்ற ஆதர்ஷ், பெண்ணை அவதூறாக பேசியுள்ளார். மேலும் தனது உறவினர் ராஜன் என்பவருடன்  சேர்ந்து சிறுமியிடமும் அசிங்கமாக பேசியுள்ளார். இதையடுத்து  அந்த...

தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாக சாலையில் உள்ள அல்போன்சா நகர் புனித திருத்தல அல்போன்சா தேவாலய 10 நாள் பெருந்திருவிழா நேற்று ஜூலை 19-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது,

குமரி – 23 புதிய பேருந்துகள் இயக்கம்

மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக அரசால் இயக்கப்படுகின்ற சேதமடைந்த பழைய அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதே போல இன்று மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து, மதுரை, திருச்சி, களியக்காவிளை, நாகர்கோயில் உட்பட 23- வழித்தடங்களுக்கு புதிய பேருந்துக்கள் இயக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கி 23- புதிய அரசு...

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடும் பாதிப்பு

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை...

மைக்ரோசாப்ட் செயலிழப்பு: உலகம் முழுவதும் 1,400 விமான சேவை ரத்து

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தின.அமெரிக்காவில் 512, ஜெர்மனியில் 92, கனடாவில்...

வங்கதேச வன்முறை: 105 பேர் பலி; ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டை பயன்படுத்தினர். டாக்காவில் வெள்ளிக்கிழமை அனைத்து கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த பின்னணியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தாயகம் திரும்பும் இந்தியர்கள்: இதற்கிடையில்...

ரஷ்யாவின் சைபர் தாக்குதலால் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையா?

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையின் பின்னணியில் ரஷ்யாவின் சைபர் தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. உலக அளவில் அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன.அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகல்! – குடும்பத்தினர் பரிசீலனை

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அவரின் தடுமாற்றமான பிரச்சாரம் காரணமாக, போட்டியில் இருந்து அவர் வெளியேறுவது குறித்து பைடனின் குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊகமான வேட்பாளராக இருப்பேன் என்று பைடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதிலும், போட்டியில் இருந்து விலகும் உத்தியை துல்லியமாக சரியான நேரத்தில் செயல்படுத்தலாம் என்று அவரது குடும்பத்தினர் யோசித்து வருவதாக இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு பைடன் போட்டியில் இருந்து விலகும்பட்சத்தில், அது அவரது ஐந்து தசாப்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...