Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ரயில்வே ஊழியருக்கு ரூ.4 கோடிக்கு மின் கட்டண பில்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 18-ம் தேதி காலை 11.30 மணிக்கு உ.பி. மின் வாரியத்திலிருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் மின் கட்டண பில் தொகைரூ.4,02,31,842 என குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக அவர் மாதந்தோறும் ரூ.1,490-ஐ மின் கட்டணமாக செலுத்துவார்.இதுகுறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி கூறும்போது, “அது கணினி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால், கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம்”...

தோல்விக்குப் பிறகும் ஏன் இவ்வளவு அகங்காரம்? – ராகுல் காந்தியை விமர்சித்த அமித் ஷா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றுஉள்ள இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்ற நிலையில்,ராகுல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனத்தை ராகுல் முன்வைத்து வருகிறார். இந்நிலையில்,ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பொதுவாக தேர்தலில் வென்றகட்சிகள் அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன்.இப்போதுதான் முதன்முறையாகதேர்தலில் தோற்ற கட்சியின் தலைவர் (ராகுல் காந்தி) அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்க்கிறேன். இந்தத் தேர்தலில் பாஜக...

2050-க்குள் முதியோர் எண்ணிக்கை 2 மடங்காகும்; சுகாதார துறையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் – ஐ.நா இந்திய தலைவர் தகவல்

0
‘இந்தியாவில் 2050-ம் ஆண்டுக் குள் முதியவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று ஐ.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர் பரிந்துரைத் துள்ளார். உலகளவில் மக்கள் தொகையில் பாலின சமத்துவம், பெண்களின் உடல்நலம், குழந்தை பெறுதல், உரிமைகள் போன்றவற்றுக்காக ஐ.நா. சார்பில் தனி நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் இந்திய தலைவர்ஆண்டிரீயா ஓஜ்னர், பிடிஐ.க்குநேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இந்தியாவில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் 2050-ம் ஆண்டுக்குள் இரண்டு...

தமிழரான வாராணசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு தேசிய மின் ஆளுமை விருது

தமிழரான வாராணசி ஆட்சியர் ராஜலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கு தேசிய அளவிலான மின் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு முதல்மத்திய அரசு சார்பில் தேசிய மின் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024-ம் ஆண்டுக்கான விருது உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த மாவட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியில் அமைந்துள்ளது.தேசிய மின் ஆளுமை...

பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் யாதவ் கருத்து

‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்’’ என கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் தியாகிகள் தின பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூறினர். கொல்கத்தாவில் கடந்த 1993-ம் ஆண்டு மேற்குவங்க இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக திரிணமூல் காங்கிரஸ் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் அனுசரிக்கிறது. இந்தாண்டு தியாகிகள் தின பேரணி கொல்கத்தாவின் தர்மதலா நகரில் நேற்று நடைபெற்றது.இதில் மாநிலம் முழுவதும்...

தமிழகத்தில் ஜூலை 27 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) முதல் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசா மாநிலம் சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான...

மினி பேருந்துகளுக்கான புதிய வரைவு திட்ட அறிக்கை மீது சென்னையில் இன்று கருத்துகேட்பு

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரவு திட்ட அறிக்கை மீது இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும்வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது.அதன்படி, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர்,...

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும்.அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சம்போ செந்திலை பிடிக்க போலீஸார் தீவிரம்: தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்போ செந்திலை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அவர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் செல்போன்களை வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனை போலீஸார் நேற்று...

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா ஏன்? – பிரதமர் விளக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவரான குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இன்னும் 5 ஆண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில், அவர் விலகியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யுபிஎஸ்சியில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.ஏராளமான ஊழல்களும், ராஜினாமாவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது குறித்து பிரதமர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...