Home 2024
Yearly Archives: 2024
முஞ்சிறையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து ஆலயத்தை மட்டும் சீரழிக்கும் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை அருகே முஞ்சிறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சுனில்குமார், கென்னடி, சுரேஷ் , ஒன்றிய பொருளாளர்கள் வினு, சுரேஷ், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.கைதானவர்கள்...
ரேஷன்கடை பணியாளர்களை தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் எம். எல். ஏ. வுமான ராஜேஷ்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 - 2024 - ம் ஆண்டு வார நாள் பாடத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு பட்டய பயிற்சி பயின்று வரும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு குறைவு காரணமாக பணியாளர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. வாராந்திர விடுமுறை நாட்களில் கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் வகுப்புகள்...
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப. , அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குமரி- சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் சிக்கினர்
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதியது. இதை அடுத்து அங்கு போதையில் வந்த ஆசாமி ஒருவர் இளம் பெண்களை குறிவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பார்த்த பெண்களின் உறவினர்களிடம் கோரை உள்ளனர். அந்த நபரை பலர் கண்டித்துள்ளனர். ஆனால் அந்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் கண்டித்தவர்களை தாக்க பாய்ந்து உள்ளார். போதை தலைக்கேறிய ஆசாமி அங்கிருந்த டெல்லி அப்பளம் கடையினருகாமையில் நின்ற இளம் பெண்ணிடம் தனது சேட்டையை தொடங்கியுள்ளார்.
உடனே அந்தப் பெண் கத்தி கூச்சலிட...
ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகை
ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு அங்கு தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத்...
விஜய் படத்தில் கமல்ஹாசன்?
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய்யின் 69-வது படம் இது. இந்தப் படத்தின் கதையில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய் இணைந்து முதல் முறையாக நடித்தால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
திரை விமர்சனம்: மாய புத்தகம்
திரைப்பட இயக்குநராக முயலும் குருவின் (முருகா அசோக்) கனவில் பழமையான புத்தகமும் சீறும் பாம்பும் வருகின்றன. கனவுக்குப் பலன் கேட்க சந்நியாசியிடம் செல்கிறார். அவர், தன் கனவில் பார்த்த புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருக்கும் கதையைப் படமாக்கச் சொல்கிறார். தயாரிப்பாளரையும் அடையாளம் காட்டுகிறார். அதை நம்பியும் நம்பாமலும் தனது குழுவுடன் காந்தாரா மலைக்குச் சென்று ஹாரர் படம் இயக்க முயல்கிறார். அந்த முயற்சி என்னவானது என்பது கதை.
தற்காலத்தில் வாழும் கதாபாத்திரங்கள், பூர்வ ஜென்மத்தை உணரும் தருணங்கள், முற்பிறப்பின் முடிவுறாத வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழ்காலத்தில் எந்த...
கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: பைடன் விலகிய நிலையில் ட்ரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், செய்தி நிறுவனத்திடம் தனது கருத்தை தெரிவித்தார்.துணை அதிபர் கமலா ஹாரிஸை...
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் ஓய்கிறது
வங்கதேசத்தில் கல்வி, அரசுவேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டில் வங்கதேசம் உதயமானது. அப்போதுபாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 80 சதவீத இடஒதுக்கீடு அமல் செய்யப்பட்டது. பொது பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைத்தது.பின்னர்...
பாரிஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் முனைப்பில் லோவ்லினா
குத்துச்சண்டை விளையாட்டு 1904-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு ஓர் அங்கமாக உள்ளது. விதிவிலக்காக ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் குத்துச்சண்டை இடம் பெறவில்லை. ஏனெனில் ஸ்வீடன் சட்டம் குத்துச்சண்டையை தடை செய்யப்பட்ட விளையாட்டாக அறிவித்திருந்தது.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை அறிமுகமானது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 13 எடைப் பிரிவுகளில் குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட உள்ளது. ஆடவர் குத்துச்சண்டையில் ஏழு எடை பிரிவுகளிலும், மகளிர் குத்துச்சண்டையில் ஆறு எடை பிரிவுகளிலும் போட்டிகள்...














