ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகை

0
202

ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.   இரவு அங்கு தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here