குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதியது. இதை அடுத்து அங்கு போதையில் வந்த ஆசாமி ஒருவர் இளம் பெண்களை குறிவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பார்த்த பெண்களின் உறவினர்களிடம் கோரை உள்ளனர். அந்த நபரை பலர் கண்டித்துள்ளனர். ஆனால் அந்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் கண்டித்தவர்களை தாக்க பாய்ந்து உள்ளார். போதை தலைக்கேறிய ஆசாமி அங்கிருந்த டெல்லி அப்பளம் கடையினருகாமையில் நின்ற இளம் பெண்ணிடம் தனது சேட்டையை தொடங்கியுள்ளார்.
உடனே அந்தப் பெண் கத்தி கூச்சலிட கடை உரிமையாளர் அந்த ஆளை பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி அவரிடம் தகராரில் ஈடுபட்டு கட்டி புரண்டு சண்டை இட்டுள்ளனர். இதை அடுத்து அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அந்த போதை ஆசாமியை பிடித்து கவனித்து எச்சரித்து அனுப்பி விட்டுள்ளனர். அதேபோல வாவுபலி மைதானத்திற்குள் பெண்கள் கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் தாய், மகள் இருவர் கழிவறைக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த ஆசாமி ஒருவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் நின்று மொபைலில் வீடியோ எடுத்து உள்ளார். இதனைப் பார்த்த பெண்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்தனர்.