முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து ஆலயத்தை மட்டும் சீரழிக்கும் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை அருகே முஞ்சிறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சுனில்குமார், கென்னடி, சுரேஷ் , ஒன்றிய பொருளாளர்கள் வினு, சுரேஷ், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
கைதானவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு விடுதலை செய்தனர்.