தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் எம். எல். ஏ. வுமான ராஜேஷ்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 – 2024 – ம் ஆண்டு வார நாள் பாடத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு பட்டய பயிற்சி பயின்று வரும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு குறைவு காரணமாக பணியாளர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. வாராந்திர விடுமுறை நாட்களில் கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
கடந்த காலங்களில் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அஞ்சல் வழி கல்வி எனதொடங்கப்பட்டு நியாயவிலை கடைகளின் வார விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டுறவு பட்டயபயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தப்படாத காரணத்தினால் வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் குமரி மாவட்டத்தில் மட்டும் 50 -க்கும் மேற்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நியாவிலை கடை பணியாளர்களின் வருகை பதிவேடு குறைவை தளர்வு செய்து ஆகஸ்ட் மாதம் 7 – ம் தேதி தொடங்கும் தேர்வை எழுத அனுமதி வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.