Google search engine
Home 2024

Yearly Archives: 2024

நீட் உள்ளிட்ட தேர்வு முறையில் தீவிர பிரச்சினை நிலவுகிறது: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது நாடு முழுவதும் அறிந்த செய்தியாக உள்ளது. ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பிரச்சினைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார். நாட்டில் உள்ள லட்சக்கணக் கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்ற கவலையுடன் உள்ளனர். இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கி யுள்ளனர்.நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக...

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை: நிதிஷ் குமாருக்கு மத்திய அரசு பதில்

பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் ஜாஞ்சர்பூரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ராம்பிரித் மண்டல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க பிஹார் மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா என்று நிதி...

கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின: தமிழகத்துக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரத்து 770 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.இதனால் 124.80 அடி உயரம்உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.15 அடியைஎட்டியது. அணை முழுவதுமாகநிரம்பியுள்ளதால், அணையில் இருந்து 55 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை7 மணிக்கு வினாடிக்கு 25...

முதல்வர் மோகன் யாதவ் 25-ல் கோவைக்கு வருகை: ம.பி.யில் முதலீடு செய்ய தமிழக தொழில் துறையினருக்கு அழைப்பு

பெரும்பாலான வட மாநிலங்களில் நீர்வளம், மனிதவளம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் அதிக அளவில் உள்ளன. இருப்பினும், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் தொழில் மற்றும் வர்த்தகத்தின் நிலை சிறப்பாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக ஆளும் மாநில அரசுகள், தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேச (உ.பி.) அரசு, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க தமிழ்நாட்டு தொழில் துறையினருக்கு அழைப்பு...

மாற்றுத் திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்து: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனம்

தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றதும், முதன்முதலில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது. முதல்வருக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சூழலில் தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், மாற்றுத் திறனாளிகள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.ஏஐஎஸ் எனப்படும் அகில இந்திய சர்வீஸ்களான ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எதற்கு? ஐஏஎஸ் என்றால் மக்களின் குறைகளை நேரில் சென்று...

இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டு தாமதமாக நடத்த வேண்டும்: முன்னாள் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

இலங்கையில் அதிபர் தேர்தலை ஓராண்டுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள்தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாணமுதல்வருமானசி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இலங்கையில் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 2020-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களில், 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று, மகிந்த ராஜபக்ச பிரதமரானார்.கரோனா பரவல், பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள்போராட்டம் நடத்தினர். தொடர்ந்து,...

ராஜினாமா செய்தது ஏன்? – தமாகா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா விளக்கம்

மக்களவைத் தேர்தலில் தமாகா பின்னடைவை சந்தித்ததை அடுத்து, கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, தனதுபதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் நடைபெற்ற தமாகா செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் மற்றும்வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், கட்சியின் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நான் கடந்த 10 ஆண்டுகளாக இளைஞரணி மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், எனது...

மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை புறநகரில் தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்று என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய...

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது: பேதம் பார்க்கும் பண்பு இல்லை என விளக்கம்

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும், திட்டத்தை மூடிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறை கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகங்களை மூடிவிடுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால்,அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களுக்கு ரூ.250 கோடி நிதிஒதுக்கி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஜூலை...

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெற உடனடியாக டெண்டர்: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை உடனடியாக விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால், இந்த அரசு பதவியேற்றது முதல் டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...