Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையேயும், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கீழ்கட்டளையில் இருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் (18டி, 18பி, எம்1, 45ஏசிடி) இன்று முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கைவேலி...

மணலோடை ரப்பர் தோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மணலோடை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார், துறை ரீதியான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தீவைக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ் கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த 18 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் சந்தா கட்டி வருகிறார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக நலவாரியத்தால் வழங்கப்படும் 20000 ரூபாய் பணபலம் வேண்டி கடந்து சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். அதற்கான பணம் கிடைக்காதால் விரத்தி அடைந்தவர். நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தனது நலவாரிய அடையாள அட்டையை தீ வைக்க...

நாகர்கோவிலில் போதைப்பொருளை தடுப்பது குறித்து கலந்தாய்வு

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று கலெக்டர் அழகுமீனா தலை மையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை ஒழிப்பது தொடர்பாக்கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவற்றை கைப்பற்றி, அழித்திடவும், விற்பனையாளர்களின் கடைகளை சீல் வைத்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், கலெக்டரின் நேர்முக...

மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்

திருவனந்தபுரம் அமரவிளை குற்றி வேலி விளையை சேர்ந்தவர் குட்டப்பன்(53) , அவரது மனைவி ராஜம்(52) , ஆகிய இருவரும் கூட்டப்பனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுமணி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது குழித்துறை அரசு மருத்துவமனை அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து அதி வேகமாகவும் அஜாகிரதியாகவும் சென்று குட்டப்பனின் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி உள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்துடன்...

காதல்… சிரிப்பு… யுத்தம் – ‘சூர்யா 44’ புதிய கிளிம்ப்ஸ் எப்படி?

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிளாப் அடித்து தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு குட்டி...

கூட்டுக் குடும்ப முக்கியத்துவம் பேசும் ‘வீராயி மக்கள்’

வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீராயி மக்கள்'. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார். படத்தை இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா கூறும்போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடும் சொல்லும் படம். சொந்த ஊர், சொந்த மண், சொந்தங்கள் என்பது தனி சுகத்தை, விவரிக்க முடியாத...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகி உள்ளார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்றார்.அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது....

பாரிஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி?

1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் அறிமுகமானது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இடம் பெற்றது. இதன் பின்னர் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவு கைவிடப்பட்டு அணிகள் போட்டியாக மாற்றப்பட்டது. 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு சேர்க்கப்பட்டது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை சீனா 60 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதேவேளையில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை. எனினும்...

2027-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? – கவுதம் கம்பீர் பதில்

டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்குஎதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ளஒருநாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விலகக்கூடும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு தற்போது இலங்கை தொடரில் இருவரும் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் புதியதலைமை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...

குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...

அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்

அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...