கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ் கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த 18 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் சந்தா கட்டி வருகிறார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக நலவாரியத்தால் வழங்கப்படும் 20000 ரூபாய் பணபலம் வேண்டி கடந்து சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். அதற்கான பணம் கிடைக்காதால் விரத்தி அடைந்தவர். நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தனது நலவாரிய அடையாள அட்டையை தீ வைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதை தடுத்து நிறுத்தி உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்து பணபலம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.