நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று கலெக்டர் அழகுமீனா தலை மையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை ஒழிப்பது தொடர்பாக்கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவற்றை கைப்பற்றி, அழித்திடவும், விற்பனையாளர்களின் கடைகளை சீல் வைத்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், உதவி இயக்குனர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட் சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), உதவி ஆணையர் லொரைட்டா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல் வகுமார், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், மாநகர நகர்நல அலுவலர் ராம்குமார், தாசில்தார்கள் மூர்த்தி (அகஸ்தீஸ்வரம்) கோலப்பன் (தோவாளை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.