Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஒலிம்பிக்கில் எங்கள் தேசியக் கொடியை உயர பறக்கச் செய்வோம்: உக்ரைன் வீரர்கள் சூளுரை

விளையாட்டு உலகின் பிரம்மாணடத் திருவிழாவான ஒலிம்பிக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அன்று பிரான்ஸில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் தங்கள் நாட்டு கொடியை உயர பறக்கச் செய்து நாட்டு மக்களை மகிழ்விப்போம் என உக்ரைன் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் சூளுரைத்துள்ளனர். அந்த நாட்டின் சார்பில் சிறிய அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்கச் செய்துள்ளது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 140 வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே உக்ரைன் சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக வீரர்கள்...

ஆந்திராவுக்கு ஆக்ஸிஜன் அளித்தது போல் உள்ளது: ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியதற்கு சந்திரபாபு நாயுடு நன்றி

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு இம்முறை நிதிகளை அள்ளி கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்கும் சந்திரபாபு நாயுடு ஆளும் மாநிலமான ஆந்திர மாநிலத்திற்கு, பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ளதால்,அதனை கவனத்தில் கொண்டும், மாநில பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்த தலைநகரத்திற்கான நிதி, போலவரம் அணைகட்ட நிதி, தொழிற்சாலைகள் அமைக்க போதிய உதவிகள், பின் தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி போன்றவை...

மத்திய பட்ஜெட் 2024-25: மேம்பாட்டுக்கான முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு...

பிஹாருக்கு ரூ.26,000 கோடி நிதியுதவி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பிஹாருக்கு மத்திய அரசு சிறப்புஅந்தஸ்து அளிக்க மறுத்துவிட்டாலும் தாராளமாக நிதியுதவி அளித்துள்ளது. பிஹாரில் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26,000 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முழு வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும். அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பிஹாரில் உள்ள கயாவில் தொழில் வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது,கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் பாட்னா-பூர்னியா...

இளநிலை ‘நீட்’ தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது: 20 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து

இளநிலை மருத்துவ படிப்புக்கானநீட் தேர்வு முடிவை ரத்துசெய்ய உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சத்து 33,297 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் இதுவரை இல்லாத அளவில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். நேரக் குறைபாடு சிக்கல்களை முன்வைத்து 1,563 மாணவர்களுக்கு...

ஆந்திராவின் மங்களகிரி சேலை அணிந்து வந்த நிதி அமைச்சர் நிர்மலா | மத்திய பட்ஜெட் 2024

மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு பல சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில்ஆந்திராவின் பிரபல கைத்தறி பருத்தி ஜவுளிகளில் ஒன்றான மங்களகிரி சேலையை அமைச்சர் நிர்மலா உடுத்தியிருந்தார். தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்த அமைச்சர் நிர்மலா, ஆந்திராவின் மருமகள். இவரது கணவர் பாரகலா பிரபாகர். நிர்மலாவின் கைத்தறி சேலை, சற்றே மங்கலான வெள்ளை நிறத்தில் பெரிய கட்டங்களுடனான வடிவத்தில் இருந்தது. இதன் எதிர்மறை நிறமாக வயலட்டில் சேலைஓரங்கள் இருந்தன. ஜொலிக்கும் பட்டு ஜவுளியிலான இந்த சேலையின் முந்தானை பலவேலைப்பாடுகளுடன் கண்ணை கவரும்வகையில்...

224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி கணக்கு காட்டிய 353 பேராசிரியர்கள்: ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

0
தமிழகத்தில் 224 தனியார் பொறியில் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) அக்கல்லூரிகளில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது...

லட்சத்தில் ஒருவரை தாக்கும் அபூர்வ வகை நோய் பாதித்த ம.பி பெண்: மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்

ஒரு லட்சம் பேரில் ஒருவரைத் தாக்கும் ‘குயில்லன் பார்ரே’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலப் பெண்ணை, மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கனி (26). இவர், தனது கணவரின் பணிநிமித்தமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இடம் பெயர்ந்தார். இந்நிலையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த ராஜ்கனிக்கு, கடந்த ஜூன் 20-ம்தேதி வீட்டிலேயே ஆண் குழந்தைபிறந்தது. ஜூன் 30-ம் தேதி அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி சரிவர விசாரிக்கவில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைசிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்ததருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆள்மாறாட்ட வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் சிறப்புக் குழுஅமைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், சிறப்புக்...

தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்: வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான், வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது வணிகர்கள் நலவாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராகவும், அமைச்சர் பி.மூர்த்தியை துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.இதன்கீழ், வணிகவரித்துறை செயலர், ஆணையர், நிதித்துறை, தொழிலாளர் நலத்துறை செயலர்கள் உறுப்பினர்களாகவும்,...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...