Google search engine
Home 2024

Yearly Archives: 2024

இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதில்

மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார். இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நான்கு இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இவற்றுக்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிக்கை:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4இணை சீருடைகள்...

கூகுள் தளத்தில் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரி வழக்கு

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல்செய்துள்ள மனுவில், "கூகுள்தளத்தில் தவறான நபர்கள்ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளாக விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாசப்புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு மன பாதிப்பைஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் இருக்கிறது" என்று கூறியிருந்தார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர்கொண்ட முதல் அமர்வானது கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள் தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை. சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டு மக்கள் மீது கூடுதல் நிதியை சுமத்துவது நியாயமற்ற...

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தொகுதி செயலாளர், தலைவர் விரைவில் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமகவின் களச் செயல்பாடு களை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒருதொகுதி செயலாளர், தொகுதிதலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பும், நியமனங்களும் விரைவில் வெளியிடப்படும். மாவட்ட செயலாளர் மாவட்ட அளவில் கட்சியின் பிரதிநிதியாகசெயல்படுவார். உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தல் பணிகளை மேற்கொள்வார். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் ஏற்பாடு செய்வார்.அவர் கட்சியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைதல், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் ஆகிய...

தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம்: பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கருத்து

தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை. அதில் பங்கேற்று, தமிழகத்துக்குத் தேவையான...

கோயில் ரோப் கார் வசதி தொடங்கப்பட்ட 2-வது நாளில் பழுது: அந்தரத்தில் தவித்த 3 பெண்கள் பத்திரமாக மீட்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் 1,178 அடி உயரத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ரூ.9.10 கோடியில் ரோப்கார்வசதி நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 4 பெட்டிகளில் தலா 2 பேர் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் 2-வது நாளான நேற்று ரோப் கார் இயங்கியபோது காற்று வேகமாக வீசியது. இதனால், கம்பி வடத்தில் இருந்து சக்கரம் நகர்ந்ததால் ரோப்கார் பாதியிலேயே நின்றது. இதையடுத்து, ரோப் காரில் 2 பெட்டிகளில் பயணம் செய்த, திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த...

ஷெபாலி வர்மா அதிரடி: நேபாளத்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா | மகளிர் ஆசிய கோப்பை

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷெபாலி வர்மா - ஹேமலதா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 42 பந்துகளில்...

இலங்கை கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர்வரும்27-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டி 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிலீக் சுற்றுடன் வெளியேறி இருந்ததால் கேப்டன் பதவியில் இருந்து ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியஅணிக்கு எதிரான தொடரில் சரித்...

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்க மேடையை மீண்டும் அலங்கரிப்பாரா மீராபாய் சானு?

வீரர்களின் உடல் வலிமை மற்றும் மன உறுதியின் வெளிப்பாடாக திகழும் பளுதூக்குதல் விளையாட்டு 1896-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமானது. 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிருக்கான பிரிவு சேர்க்கப்பட்டது. ஆடவருக்கான பளுதூக்குதல் பிரிவில் கிரீஸ் வீரர் பைரோஸ் டிமாஸ் 3 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1992 முதல் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை அவர் முறையே 82.5, 83, 85 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்றார். மற்றொரு கிரீஸ் வீரரான அகாகியோஸ் காகியாஸ்விலிஸ் மற்றும் துருக்கியின்...

டென்னிஸில் சாதிக்குமா போபண்ணா – பாலாஜி ஜோடி? | பாரிஸ் ஒலிம்பிக்

பெரும்பாலும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாக திகழும் டென்னிஸ் ஒலிம்பிக்கில் கவனிக்கப்படக்கூடிய போட்டிகளில் ஒன்றாகும். ஒலிம்பிக் டென்னிஸ் வரலாற்றில் கிரேட் பிரிட்டன் 43பதக்கங்களை வென்று வெற்றிகரமான நாடாக உள்ளது. இதில் 17 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கம் அடங்கும். இதற்கு அடுத்தபடியாக 39 பதக்கங்களை வென்று அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. எனினும் இந்த விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற சாதனை அமெரிக்காவின் வசமே உள்ளது. ஒலிம்பிக் டென்னிஸில் அமெரிக்கா 21 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 1988-ம் ஆண்டில் இருந்துதான்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...