Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஷேக் ஹசீனா பதவி விலக காரணமான நஹித் இஸ்லாம் யார்?

டாக்காவைச் சேர்ந்த சமூகவியல்மாணவர் நஹித் இஸ்லாம். வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை இவர்தான் தலைமையேற்று ஒருங்கிணைத்துள்ளார். அவரின் போராட்டம் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வைத்துவிட்டது. 1998-ல் டாக்காவில் பிறந்த நஹித் திருமணமானவர். பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்களின் முக்கிய போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நஹித். போராட்டத்தின் போதுநஹித் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் கலவரமாக மாறியது. அதன் பிறகுதான் ஷேக் ஹசீனா பதவியிழந்து நாட்டை விட்டு வெளியேறினார்.ராணுவத்தால் வழிநடத்தப்படும் அல்லது ஆதரிக்கப்படும் எந்தவொரு அரசையும் உறுதியாக...

“கவனமுடன் இருங்கள்” – பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது....

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி; இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி!

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி, உலக சாம்பியனான ஜெர்மனியுடன் இன்று மோதியது. இரவு 10.30க்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.அரையிறுதிக்கே உரிய பரபரப்புடன் தொடங்கிய ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை பதிவு...

பரஸ்பரம் விவாகரத்து கோரும் தம்பதிக்கு 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2021-ல் மணமுடித்து வாழ்ந்து வந்த மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதி பரஸ்பர சம்மதத்துடன் அண்மையில் விவாகரத்து கோரினர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கவுரி கோட்சே அளித்த தீர்ப்பில் கூறியதாவது: பொதுவாக கணவன்-மனைவி இருவரில் யாரோ ஒருவர் மண முறிவு பெற வேண்டி நீதிமன்றத்தை நாடும்போது அவர்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்த நீதிமன்றம் முயலும். அதுவே தம்பதி கலந்து பேசி பிரிவதெனத் தீர்க்கமாக முடிவெடுத்த பிறகு அதனை நியாயமான முறையில் நீதிமன்றம் அணுக...

வங்கதேச கலவரத்தின் பின்னணியில் சீனா, ஐஎஸ்ஐ: இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தகவல்

இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது.இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள், மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று திட்டவட்டமாக...

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த...

வக்ஃப் சட்டதிருத்தத்தை தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சி

நாடு முழுவதிலும் உள்ள வக்ஃப்கள் மீதான சட்டத்தில் 40 வகையான திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இணையதளம் வழியான கூட்டத்தை, நேற்று முன்தினம் இரவு, முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்நடத்தியது. இதன் தலைவரான மவுலானா காலீத் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசிமற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசின்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஆக. 7) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா,...

தமிழகத்தில் அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், ‘தனியார்மயம், ஒப்பந்தமுறை எதிர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: மருத்துவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்கூட இன்றைக்கு ஒப்பந்த ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். இப்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஒப்பந்த முறை படிப் படியாக இன்றைக்கு அரங்கேற்றப்படுகிறது.எல்லாவற்றையும் தனியாருக்கு ஒப்ப டைத்து விடுவது மற்றும் எல்லா ஊழியர்களையும் ஒப்பந்த...

பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன்? – தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன் என்பது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மல்லிகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவரும் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக, ரத்த வழி உறவுகளின் சாதிச் சான்றிதழை அதிகாரிகள் கேட்டனர். அதன்படி, எனது உறவினரின் சாதிச் சான்றிதழ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...