டாக்காவைச் சேர்ந்த சமூகவியல்மாணவர் நஹித் இஸ்லாம். வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை இவர்தான் தலைமையேற்று ஒருங்கிணைத்துள்ளார். அவரின் போராட்டம் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வைத்துவிட்டது.
1998-ல் டாக்காவில் பிறந்த நஹித் திருமணமானவர். பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்களின் முக்கிய போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நஹித். போராட்டத்தின் போதுநஹித் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் கலவரமாக மாறியது. அதன் பிறகுதான் ஷேக் ஹசீனா பதவியிழந்து நாட்டை விட்டு வெளியேறினார்.ராணுவத்தால் வழிநடத்தப்படும் அல்லது ஆதரிக்கப்படும் எந்தவொரு அரசையும் உறுதியாக எதிர்ப்பதாக நஹித் இஸ்லாம் தெரிவித்துள்ளார். நாங்கள் சிபாரிசு செய்யும் அரசை தவிர வங்தேசத்தில் எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.மேலும், நோபல் பரிசுபெற்ற முகமது யூனுஸை தலைமை ஆலோசகராக நஹித் இஸ்லாம் முன்மொழிந்துள்ளார்.