“கவனமுடன் இருங்கள்” – பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

0
56

கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.கலவரப் பின்னணி: வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.குறிப்பாக பெல்ஃபாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் திங்கள் கிழமை மாலை முதல் பதற்றமான சூழல் நிலவியது. ஒரு சூப்பர் மார்க்கெட் தீக்கிரையாக்கப்பட்டது. போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. லண்டன் பிபிசி செய்தி நிறுவன தகவலின்படி வன்முறை வெடித்ததில் இருந்து இதுவரை 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரிட்டனின் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக பிரதமர் கீர் ஸ்டார்மர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here