Home 2024
Yearly Archives: 2024
ஆயுதங்களுடன் வந்து தாக்கிய 8 பேர் கும்பலிடம் இருந்து தந்தையை காப்பாற்றிய சத்தீஸ்கர் சிறுமி
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் நாராயண்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் சோம்தார் கோர்ரம். முன்விரோதம் காரணமாக சோம்தாரை கொலைசெய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் அவரதுவீட்டுக்குள் புகுந்து சரமாரியாக கோடரியால் அவரை வெட்டி யுள்ளது.
இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்த சோம்தாரின் 17 வயது மகள் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது தந்தையை சுற்றிவளைத்து தாக்கிய அந்த கும்பலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 8 பேர் கும்பலில் இருவரிடம் துப்பாக்கியும் இருந்துள்ளது. ஆனால், இதை எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த சிறுமி தந்தையை...
பட்டு துணி வாங்கும்போது மோசடிகளை தவிர்க்க ‘சில்க் மார்க்’ முத்திரையை பார்த்து வாங்க வலியுறுத்தல்
‘பட்டு துணி வகைகள் வாங் கும்போது சில்க் மார்க் முத்திரை உள்ளதா என பொது மக்கள் கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம், மோசடிகளை தவிர்க்க முடி யும்’’ என இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் உதவி செயலாளர் கே.எச்.ஹேமாஸ்ரீ கூறினார்.
மத்திய ஜவுளித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியத்தின் இந்திய சில்க் மார்க் நிறுவனம் மற்றும் குடி மக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து சில்க் மார்க் குறித்த விழிப்புணர்வு முகாம், சென்னை, அம்பத்தூரில் உள்ள அன்னை வயலெட் கலை...
ஒடிசாவில் 42 கோடி டன் இருப்பு கொண்ட நிலக்கரி சுரங்கம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு
42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்வதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வரப்படுகிறது. இதற்காக, 2016-ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால் இச்சுரங்கம் கைவிடப்பட்டது.இதையடுத்து, மத்திய...
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை அடுத்த ஆண்டுமுதல் உயர்த்தப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைசார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும், மருத்துவ படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலை.யில் நேற்று நடந்தது.
இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டுஇந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் மரணம் அடையும்போது அவர்களின் ஈம செலவுக்கென...
கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்: 17-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை...
ஜெய்ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் சொல்வார்: அண்ணாமலை விமர்சனம்
அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோ என முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தென்னிந்திய மீனவர் பேரவை தலைவர் ஜெய பாலையன் தலைமையில், துணைத் தலைவர்கள் ராம், கஜபதி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் பாஜகவில் நேற்று இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:தமிழக மீனவர்கள் பிரச்சினைதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன்...
குமரி -துறைமுகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது மக்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி, தெரிசனங்கோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தாணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை மாவட்ட - வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார் (ஊராட்சிகள்), சேகர், தோவாளை தாசில்தார் கோலப்பன், சமூக...
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைகிறது: நாடாளுமன்றம் கலைப்பு; ஊரடங்கு வாபஸ்
வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க மாணவர் சங்கங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இது நாடுமுழுவதும் பெரும் கலவரமாக மாறியது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சூழலில் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட இடங்களை அவர்கள்...
ஹனியாவை போன்றே பல ஆண்டுகளுக்கு முன்பே பற்பசை மூலம் பாலஸ்தீன எதிரியை இஸ்ரேல் தீர்த்துக் கட்டியது எப்படி?
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்ய நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்ட மொசாட் அதனை எந்தவித பிசகலும் இல்லாமல் ஈரானில் செய்து முடித்தது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தனது பாலஸ்தீன எதிரியை பற்பசையின் மூலமாக தீர்த்துக் கட்டியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு ஏர்பிரான்ஸ் விமானத்தை கடத்தியதற்கு மூளையாக செயல்பட்டவர் வாதி ஹடாத். இவர் அப்போது பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (பிஎப்எல்பி) தலைவராக செயல்பட்டு...














