கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி, தெரிசனங்கோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தாணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை மாவட்ட – வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாந்தி, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார் (ஊராட்சிகள்), சேகர், தோவாளை தாசில்தார் கோலப்பன், சமூக பாதுகாப்பு தாசில்தார் தாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் மகாராஜா பிள்ளை, பூதலிங்கம் பிள்ளை, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் இ. என். சங்கர், தோவாளை வட்டார வழங்கல் அலுவலர் மரியஸ் டெல்லா, வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், மின்சார உதவிசெயற் பொறியாளர் சசிக்குமார், ஊராட்சி துணை தலைவர்கள் சுகத்தி, மனோவா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இதில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், தெரிசனங்கோப்பு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.