அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியா – வியட்நாம் இணைந்து பாடுபடும்: பிரதமர் மோடி அறிவிப்பு

0
18

இந்​தோ – பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்தன்​மை, வளர்ச்​சிக்கு இந்தியாவும் வியட்​நா​மும் ஒருங்கிணைந்து பாடு​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வுக்கு 3 நாள் அரசு முறைப் பயண​மாக வருகை தந்​துள்ள வியட்​நாம் அதிபர் டோ லாம் மற்​றும் பிரதமர் மோடி இடையி​லான உயர்​நிலை குழுப் பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்று நடைபெற்றது. இந்​தப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, இரு நாடுகளுக்​கும் இடையி​லான பொருளா​தா​ரம் மற்​றும் பாதுகாப்புத் துறை உறவு​களைப் பெரு​மள​வில் விரிவுபடுத்​து​வது எனத் தீர்​மானிக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பான கூட்​டறிக்​கை​யில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இந்​தியா மற்​றும் வியட்​நாம் ஆகிய இரு நாடு​களுமே இந்தோ – பசிபிக் பிராந்​தி​யத்​தைப் பொறுத்த வரை ஒரே மாதிரி​யான தொலைநோக்​குப் பார்​வையைத் கொண்​டுள்​ளன. இந்​தப் பிராந்​தி​யத்​தில் சட்​டத்​தின் ஆட்​சியை நிலை​நாட்​ட​வும், அமை​தி, ஸ்திரத்​தன்மை மற்​றும் வளர்ச்சி ஏற்​பட​வும் இரு நாடுகளும் தொடர்ந்து ஒன்​றிணைந்து பங்​களிப்பை வழங்​கும். இவ்​வாறு பிரதமர் கூறி​யுள்​ளார்.

சீனா​வின் ஆதிக்​கம்

இந்தோ – பசிபிக் பிராந்​தி​யத்​தில் சீனா​வின் அதி​கரித்து வரும் ராணுவ ஆதிக்​கம் மற்​றும் அத்​து​மீறல்​கள் குறித்து இரு நாட்​டுத் தலை​வர்​கள் தலை​மையி​லான குழுக்​கள் விரி​வாக விவாதித்ததாகத் தெரி​கிறது. சர்​வ​தேச கடல் எல்லை விதி​களுக்கு உட்​பட்டு இப்​பி​ராந்​தி​யத்​தில் பாது​காப்பை உறுதி செய்​வது குறித்தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இந்​தியா – வியட்​நாம் இடையே பொருளா​தார ஒத்​துழைப்​பு, ராணுவத் தளவாட உற்​பத்தி மற்​றும் தொழில்​நுட்​பப் பகிர்வு ஆகிய துறை​களில் புதிய புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் நேற்று கையெழுத்​தாகின. இது ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் இந்​தி​யா​வின் கிழக்கு நோக்​கிய செயல்​பாட்​டுக் கொள்​கைக்கு மேலும் வலுசேர்க்​கும்​ வித​மாக அமைந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here