தமிழகத்தை கண்​டித்து கர்நாடகாவில் நடைபெற்ற‌ முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை

0
31

காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு விவ​காரத்​தில் தமிழகத்தை கண்​டித்து கர்நாடகாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்​டத்​துக்கு மக்​களிடம் ஆதரவு கிடைக்​க​வில்​லை.

காவிரி நதி நீர் பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகத்தை கண்​டித்​தும், மேகே​தாட்டு அணையை கட்ட வலி​யுறுத்​தி​யும் கன்னட கூட்டமைப்​பின் சார்​பில், நேற்று கர்​நாட​கா​வில் முழு அடைப்பு போராட்​டத்​துக்கு கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் அழைப்பு விடுத்​தார். இதற்கு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார், முழு அடைப்பு போராட்​டம் நடத்த வேண்​டாம் என வலி​யுறுத்​தி​னார்.

முதல்​வரின் கோரிக்​கையை ஏற்று கர்​நாடக தனி​யார் பள்​ளி, கல்லூரி​கள் கூட்​டமைப்​பு, தனி​யார் பேருந்து மற்​றும் வாடகை கார் ஓட்​டுநர் சங்​கங்​கள், உணவக உரிமை​யாளர்​கள் சங்​கம், ஆட்டோ ஓட்​டுநர் சங்​கம் உள்​ளிட்​டவை தங்​களது ஆதரவை வாபஸ் பெற்​றன. இதனால், மாநிலம் முழு​வதும் நேற்று பள்​ளி, கல்​லூரி​கள், கடைகள், உணவக‌ங்​கள், அரசு மற்​றும் தனி​யார் பேருந்​துகள், திரையரங்​கங்​கள், ஆட்​டோ, வாடகை கார்​கள் வழக்கம் போல இயங்​கின.

அதேவேளை​யில் பெங்​களூரு​வில் சுதந்​திர பூங்​கா, டவுன்​ஹால், தமிழக எல்​லை​யான அத்​திப்​பள்​ளி, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்​களில் கன்னட அமைப்​பினரும், விவ​சாய சங்​கத்​தினரும் போரட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து மாலை​யில் விடு​வித்​தனர்.

பெங்​களூரு​வில் நேற்று கன்னட கூட்​டமைப்​பின் தலை​வர் வாட்டாள் நாக​ராஜ், போராட்​டத்​துக்கு புறப்​படு​வதற்கு முன்​பாக போலீ​ஸார் அவரை வீட்​டிலேயே கைது செய்​தனர். அதற்கு எதிர்ப்பு தெரி​வித்த வாட்​டாள் நாக​ராஜ், போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதனால் குண்​டு​கட்​டாக அவரை தூக்​கிச் சென்று வாக​னத்​தில் ஏற்​றினர்.

தமிழக எல்​லை​யில் அரசு பேருந்​துகளை தடுக்க முயன்ற கன்னட அமைப்​பினரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ஆதரவு கிடைக்​காத​தால், தமிழக அரசு பேருந்துகள் வழக்​கம்​போல பெங்​களூரு, மைசூரு, கோலார் தங்கவயல் உள்​ளிட்ட இடங்​களுக்கு இயக்​கப்​பட்​டன.

கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரை நேற்று 10-க்​கும் மேற்​பட்ட கன்னட அமைப்​பினரும்​, விவ​சாய சங்​கத்​தினரும்​ சந்​தித்​து பேசினர்​. அப்​போது முழு அடைப்​பு போ​ராட்​டத்​துக்​கு வழங்​கிய ஆதரவை திரும்​ப பெறு​வ​தாக கூறினர்​.

10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கடந்த செவ்​வாய்க்​கிழமை நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என உத்​தர​விட்​டது. இதற்கு மறுப்பு தெரி​வித்த கர்நாடக அரசு, உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக தெரி​வித்​தது.இந்​நிலை​யில், கர்​நாடக அரசு 10 ஆயிரம்​ கன அடி நீரை தமிழகத்​துக்​கு திறந்து விட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here