பெங்களூருவில் பெண்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

0
13

பெங்களூருவில் ஆட்டோ வாடகை கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தின்போது 2 பெண்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் தனியார் விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் நேற்று தனது 21 வயது தோழியுடன் ஓட்டலுக்கு செல்வதற்காக‌ செயலி மூலம் ஆட்டோவை பதிவு செய்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் சேத்தன் குமார் (28) இருவரையும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் கூடுதல் பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சேத்தன் குமார் இருவரையும் தாக்கினார். இரு பெண்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்க‌ளில் வெளியாகி வைரல் ஆனது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் சேத்தன் குமாரை நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here