மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு

0
29

 உலக அளவில் மைக்ரோசாஃப்ட் சேவை முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து விமான சேவை நிறுவனங்கள் என்ன சொல்லி உள்ளன என்பதை பார்ப்போம். மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் காரணமாக டெல்லி – புனே, டெல்லி – லே மற்றும் டெல்லி – மும்பை இடையிலான மூன்று விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்த்துள்ளது. இதோடு அந்த நிறுவனத்தின் மேலும் இரண்டு விமானத்தின் திட்டமிட்ட பயண புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம் காரணமாக தங்களது விமான சேவையில் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் விமான பயணிகள் தங்கள் விமானத்தின் நிலை (ஸ்டேட்டஸ்) தகவல் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இப்போதைய சூழலில் தங்களது தகவல் தொடர்பு வழக்கம் போல உள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

இண்டிகோ, ஆகாசா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களும் தங்களது பயணிகளிடம் இதையே தெரிவித்துள்ளன. இது குறித்து டெல்லி விமான நிலையம் சார்பிலும் பயணிகளுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் முடக்கம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாஃப்ட் 365 சேவைகள் முடங்கி உள்ளன. இதில் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகளும் அடங்கும். அதை மீட்டமைக்கும் பணியல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் இன்று (நவ.13) அதிகாலை சர்வதேச அளவில் முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவன சேவை முடங்கி உள்ளது. சுமார் 74 நாடுகள் மைக்ரோசாஃப்ட் 365 சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டமைப்பதற்கான பணியை தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருந்தது.

இருப்பினும் அந்நிறுவன சேவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த சூழலில் சேவையை மீட்டமைக்கும் நோக்கில் மேற்கொண்ட பணிக்கு தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. தற்போது அதற்கான மாற்று வழியை கண்டறிந்து வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சர்வார்களை ரீஸ்டார்ட் செய்து சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளதாக விளக்கம் தந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here