ஹரியானா: அம்பாலாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு

0
35

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 12 காயமடைந்தனர்.

அம்பாலா நகருக்கு அருகில் உள்ள துல்கோட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கான்கிரீட் தளம் அமைக்கும் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அந்த தளத்தின் மேற்புறம் சில கட்டுமான பணியாளர்களும், கீழ் தளத்தில் சில கட்டுமான பணியாளர்களும் பணியில் இருந்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தவுடன் உள்ளூர் மக்கள், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மீட்புப் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகத்தினரும் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட பணியாளர்கள் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாலா காவல் துறை கண்காணிப்பாளர் அஜித் சிங் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார். கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் யார், முறையான அனுமதி பெறப்பட்டதா, விதிமீறல் நடந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இடிபாடுகளில் சிக்கிய பணியாளர்களை மீட்க இயந்திரங்களை பயன்படுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 12 பணியாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்தனர். அதில் ஐந்து பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டு பேர் விருப்பத்தின் பேரில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் பெற்றனர். மற்றவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அனுப்பினோம் என்று அம்பாலா அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ரேணு பேரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here