டெல்லியில் போதைப் பொருள் கடத்தல்: பெண் உட்பட 2 பேர் கைது

0
17

போதைப் பொருள் கடத்​தல் வழக்​கில் பெண் உட்பட 2 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவர்​களிட​மிருந்து ரூ.4.75 கோடி மதிப்​புள்ள தங்​கம், ரூ.56.69 லட்​சம் ரொக்​கம் உள்ளிட்​ட​வற்​றை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

டெல்லி வடக்கு பகு​தி​யில் உள்ள நியூ சனோத் காலனி​யில் போதைப் பொருட்​கள் கடத்​தல் குறித்து போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்​போது போதைப் பொருட்​களை கடத்தி வந்த பெண் பார்​வதி (42), அவரது கூட்​டாளி​ விகாஸ் குமார் (30) ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​களிட​மிருந்​து. ரூ.4.75 கோடி மதிப்​புள்ள தங்​கம், வெள்ளிநகைகள், ரூ.56.69 லட்​சம் ரொக்​கம் ஆகிய​வற்றை போலீஸார் பறி​முதல் செய்​தனர். பார்வதி டெல்​லி​யில் பல ஆண்டுகளாக போதைப் பொருட்​களை கடத்தி விற்​பனை செய்து வந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இவர் மீது போதைப் பொருட்​கள் தடுப்பு பிரி​வில் 12 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. மேலும் அவரது வீட்​டிலிருந்து ரூ.1.5 கோடி மதிப்​புள்ள போதைப் பொருட்​களை​யும் போலீ​ஸார் பறி​முதல்​ செய்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here