போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.4.75 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.56.69 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி வடக்கு பகுதியில் உள்ள நியூ சனோத் காலனியில் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் பார்வதி (42), அவரது கூட்டாளி விகாஸ் குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து. ரூ.4.75 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிநகைகள், ரூ.56.69 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பார்வதி டெல்லியில் பல ஆண்டுகளாக போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் மீது போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் அவரது வீட்டிலிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
