Home தேசிய செய்திகள் “ஆந்திர அரசு ஜெட் வேகத்தில் பயணிக்கிறது” – முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்

“ஆந்திர அரசு ஜெட் வேகத்தில் பயணிக்கிறது” – முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்

0

ஆந்திர அரசு சார்​பில், ‘கி​ராமத்து பண்​டிகை 3.0’ எனும் பெயரில் கிராமப்​புற வளர்ச்​சியை மைய​மாகக் கொண்​டு, நெல்லூர் மாவட்​டம், ராமாபுரத்​தில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்​டத்தை நேற்று தொடங்கி வைத்​தார். இந்நிகழ்ச்சி​யில், துணை முதல்​வர் பவன் கல்​யாண், பாஜக மாநில தலை​வர் மாதவ் ஆகியோ​ரும் பங்​கேற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசின் உறு​துணை​யுடன் நமது கூட்​டணி அரசு ஆந்​திர மாநிலத்​தில் ‘ஜெட்’ வேகத்​தில் வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இந்த கிராமத்து பண்​டிகை 3.0 திட்​டத்​துக்​காக, மத்​தி​ய-​மாநில அரசுகள் ரூ.11,085 கோடி நிதி ஒதுக்​கீடு செய்து வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​கிறது.

ஆந்​திர மாநிலத்​தில் கிராமப்​புற வளர்ச்​சித்​துறை அமைச்சராகவும் உள்ள துணை முதல்​வர் பவன் கல்​யாண் கிராமத்து வளர்ச்​சிக்​காக பெரு முயற்​சிகளை மேற்​கொண்டு வருகிறார். இதன்​மூலம், நம் மாநிலத்​தில் உள்ள அனைத்து கிராமங்​களுக்​கும் சாலை வசதி, போக்​கு​வரத்​து, மின்​சா​ரம், இணை​யதள வசதி, குடிநீர், பள்​ளிக்​கூடம், கால்​வாய் என அனைத்து வசதி​களும் செய்து தரப்​படும். மேலும், கிராமத்​தினரின் வாழ்​வாதாரத்தையும் உயர்த்த தக்க நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version