உத்தராகண்​டில் கன்வர் யாத்திரை முடிந்த பின் குப்பை மேடான ஹரித்வார் புனித பூமி

0
23

உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்​கப்​படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்​தில் கங்கை நீரை எடுத்​துச் செல்​வதற்​காகக் சுமார் 5 கோடி பக்​தர்​கள் வருகை தந்​தனர். நேற்று முன்​தினம் சிவ​ராத்​திரி வழி​பாட்​டுடன் யாத்​திரை நிறைவுபெற்றது.

இந்​நிலை​யில், ஹரித்​வாரின் கங்கை நதிக்​கரைகளி​லும் தெருக்களி​லும் பெரு​மள​வில் பிளாஸ்​டிக் பொருட்​கள், பயன்படுத்தப்​பட்ட உடைகள், சிறுநீர் கழித்த பாட்​டில்​கள் குப்பைகளாக சிதறிக் கிடக்​கின்​றன. குறிப்​பாக, ஹரித்​வாரின் மிக முக்​கிய நதிக்​கரை​யான ‘ஹர் கி பவுரி’ பகுதி பிளாஸ்​டிக் பாட்டில்கள் மற்​றும் கழி​வு​களால் கடுமையாகச் சுகா​தா​ரச் சீர்கேடு அடைந்​துள்​ளது.

கையுறை, முகக்​கவசம் இன்​றித் துப்​புரவுப் பணி​யாளர்​கள் இவற்றை அள்​ளும் வீடியோக்​கள் தற்​போது வெளி​யாகி உள்​ளூர் மக்​களிடையே பெரும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. கங்கை நீர் சேகரிக்க நூற்​றுக்​கணக்​கான மைல்​கள் நடந்து வரும் பக்​தர்​கள், புனித நதிக்​கரையை இப்​படிச் சீரழித்​துச் செல்​வது துரதிர்​ஷ்ட​வச​மானது என மக்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து ஹரித்​வார் மாநக​ராட்சி ஆணை​யர் நந்​தன் குமார் கூறுகை​யில், “சிவ​ராத்​திரி முடிவடைந்​ததும், நதிக்​கரைகள், வாகன நிறுத்​து​மிடங்​கள் மற்​றும் சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணி​யில் மாநக​ராட்சி ஊழியர்​கள் விடிய விடிய ஈடு​பட்​டனர். இது​வரை 7,000 டன்​னுக்​கும் அதி​க​மான குப்பைகள் அகற்​றப்​பட்டுள்​ளன” என்​றார்.

ஹரித்​வார் மற்​றும் ரிஷிகேஷ் மட்​டுமல்​லாமல், கங்​கை​யின் பிறப்​பிட​மான கங்​கோத்​ரிக்​கும் 57,000-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் சென்று​வந்​துள்​ளனர். பிளாஸ்​டிக் தடை செய்​யப்​பட்ட மண்டலமாக அறிவிக்​கப்​பட்ட கங்​கோத்​ரி​யிலும் டன் கணக்​கில் பிளாஸ்​டிக் மற்​றும் துணிக் கழி​வு​கள் வீசப்​பட்​டுள்​ளன. இந்நிலையில், புனிதத் தலங்​களின் தூய்​மை​யை​யும் சுற்​றுச்​சூழலை​யும் பாது​காக்​கும் வகை​யில் அரசு கடுமை​யான வி​தியை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here