Home 2024
Yearly Archives: 2024
“உண்மைக்கு கிடைத்த வெற்றி இது” – மணிஷ் சிசோடியா ஜாமீன்; ஆம் ஆத்மி கட்சி நெகிழ்ச்சி
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. நான் முன்பே கூறியது போல் இந்த வழக்கில் உண்மை, ஆதாரம் இல்லை. எங்கள் தலைவர்கள் வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர். மணிஷ் சிசோடியாவும்...
தமிழகம் முழுவதும் 56 எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: சிவில் சப்ளை சிஐடி பிரிவு அதிகாரிகள் கூண்டோடு டிரான்ஸ்பர்
தமிழகம் முழுவதும் 56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட் டுள்ளார். மேலும், சிவில் சப்ளை சிஐடி பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
சென்னை நுண்ணறிவு பிரிவு: சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கும் பிரிவு துணை ஆணையர் எஸ்.சக்தி கணேசன் சென்னை நுண்ணறிவு பிரிவு (1) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல் மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பிசுஜித் குமார் சென்னை பாதுகாப்பு...
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வில் ஐகோர்ட் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? – அன்புமணி
நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு...
பணியின்போது கண்ணியமின்றி பேசினால் நடவடிக்கை: மைக் மூலம் மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும் வாகனச் சோதனைகளின் போதும் கண்ணியமின்றி தேவையற்ற வார்த்தைகளைப் பேசும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அனைத்துக் காவலர்களுக்கும் வாக்கி டாக்கி மைக் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார். அவரின் இந்த எச்சரிக்கை ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் மதுரை பரவை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு ஆய்வாளரான தவமணி பூ விவசாயி ஒருவரை ஆபாசமாகப் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தவமணியை பணியிடை நீக்கம்...
ஒரே குற்ற சம்பவத்துக்காக இருதரப்பினர் புகார் அளித்தால் என்ன செய்ய வேண்டும்? – விதிமுறைகளை வகுத்து கோர்ட் உத்தரவு
ஒரே குற்ற சம்பவத்துக்கு இருதரப்பும் மாறி மாறி புகார் அளித்தால் அந்த வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலாஜி, ராஜகுமாரி ஆகியோர் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கைரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அப்போது அவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த கார்த்திக் என்பவரும் தனது புகார் மீது விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்...
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தனியார் நிறுவன மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை இழந்து...
மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்
ஒடிசாவிலிருந்து மாநிலங்கள வைக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. மமதா மொகந்தா கடந்த மாதம் 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தார். அவருடன் சேர்த்து 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு வரும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. மனுக்கள் வரும் 22-ம் தேதி ஆய்வு செய்யப்படும். தேர்தல் செப்டம்பர் 3-ம்...
வங்கதேசத்தில் இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு தீவைத்து எரிப்பு
வங்கதேசத்தில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்' என்ற நாட்டுப்புற இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு வங்கதேசம் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நட்புரீதியாக இவரது வீட்டுக்கு வருகை தந்தது மிகுந்த கவனம் பெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராகுல் ஆனந்தாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல்கதவை உடைத்துக் கொண்டுஉள்ளே சென்றது....
ராஜஸ்தான் பேரவையில் அவை காவலர்களை காங்கிரஸ் எம்எல்ஏ கடித்ததாக பாஜக குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஜன் லால் அரசில் அமைச்சர் ஒருவருக்கு சட்டப்பூர்வ பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் எழுப்ப முயன்றது. அப்போது அவையில் காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் பாகர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்த சபாநாயகர், அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அவர்களை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இந்நிலையில் அவையில் இருந்து வெளியேற்ற முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட இரு அவைக் காவலர்களை முகேஷ்...
வங்கதேசத்தில் முக்கியத்துவம் அல்லாத இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவு
வங்கதேசத்தில் முக்கியத்துவம் அல்லாத இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா நகரில்இந்திய தூதரகம் செயல்பட்டுவருகிறது. இதுதவிர வங்கதேசத்தின் சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா, சில்ஹெட் ஆகிய பகுதிகளில் இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளன. தற்போது வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரணசூழல் தொடர்பாக இந்திய அரசின்நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.
அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்றும்; வங்கதேசத்தில் அமைதி திரும்பியதம் இந்திய தூதரகங்கள்...














