ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஜன் லால் அரசில் அமைச்சர் ஒருவருக்கு சட்டப்பூர்வ பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் எழுப்ப முயன்றது. அப்போது அவையில் காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் பாகர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்த சபாநாயகர், அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அவர்களை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இந்நிலையில் அவையில் இருந்து வெளியேற்ற முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட இரு அவைக் காவலர்களை முகேஷ் பாகர் கடித்ததாக பாஜக தலைமை கொறடா ஜோகேஷ்வர் கர்க் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் முகேஷ் பாகர் 6 மாதங்களுக்கு சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.முகேஷ் பாகர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை நேற்று மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.