மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்

0
40

ஒடிசாவிலிருந்து மாநிலங்கள வைக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. மமதா மொகந்தா கடந்த மாதம் 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தார். அவருடன் சேர்த்து 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு வரும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது. மனுக்கள் வரும் 22-ம் தேதி ஆய்வு செய்யப்படும். தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படும். ஓட்டு எண் ணிக்கை அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் நடை பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here