Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான தடை ஆக. 11 வரை நீட்டிப்பு

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குச் செல்ல ஏற்கெனவே ஆக. 7-ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆக. 8 முதல் 11-ஆம் தேதி வரைஅனைத்து கடற்கரைகளிலும் இயல்பைவிட கடல் சீற்றம் அதிகமாக...

வினேஷ் போகத்: வலிகள் நிறைந்த ஒலிம்பிக் பாதை… 

3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்தவீராங்கனையான வினேஷ் போகத், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். கடந்த ஓராண்டாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தினார். எப்போதும் 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த பிரிவில் விளையாடுவதற்கு மற்றொரு இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல் தகுதி பெற்றதால் 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறி, தனது எடையை...

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா எனும் இந்திய தடகளத்தின் தங்க மகன்!

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த...

“அவரும் என் பிள்ளையே!” – பாக். வீரரைக் குறிப்பிட்டு நெகிழவைத்த நீரஜ் சோப்ராவின் தாயார்

“பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நதீமும் என் பிள்ளை தான்” என்று கூறி மகத்தான தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீராஜ் சோப்ராவின் தாய். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம்...

இந்தியாவுக்கு ‘நல்ல நாள்’ முதல் பாக். வீரரின் சாதனை வரை | பாரிஸ் ஒலிம்பிக் ஹைலைட்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆகஸ்ட் 8ம் தேதி இந்தியாவுக்கு நல்ல நாளாக அமைந்தது. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை புரிந்தது. மற்ற போட்டிகளில் நடந்தவற்றைப் பார்ப்போம்: ஆடவர் கூடைப்பந்து: அமெரிக்கக் கூடைப்பந்து ஆடவர் அணி அரையிறுதியில் செர்பியாவை மிக நெருக்கமாக 95-91 என்ற ஸ்கோரில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. ஒரு கட்டத்தில் செர்பியாவிடம் 17 புள்ளிகள் பின் தங்கியிருந்து தனது ஆல்டைம் முன்னணி ஸ்கோரர்...

இந்திய ஹாக்கியின் ‘கபில் தேவ்’ ஹர்மன்பிரீத் சிங்: ‘லெஜண்ட்’ ஸ்ரீஜேஷ் விட்டுச் செல்லும் வெற்றிடம்!

ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று சாதனை புரிந்ததன் பின்ன்னணியில் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், அரிய மூளை உழைப்பும் உள்ளதை மறுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ், 'The Great Wall of India'. இவர் மகுடத்துடன் ஓய்வு பெற்றுவிட்டார். இனி இவர் இடத்துக்கு வருபவர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அத்தனை சுலபமல்ல என்ற ஓர் இடத்தைக்...

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10-வது நாளாகநேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம்...

உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள பள்ளியில் ஹிஜாபுடன் வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பர்தா, ஹிஜாபுடன் வந்தமாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. சீருடைகளில் வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிநிர்வாகம் முடிவு செய்துள்ளது. உபியின் கான்பூரிலுள்ள பில்ஹர் பகுதியில், பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1960-ல்துவங்கிய இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை இந்தி மொழிவாரி வகுப்புகள் நடைபெறுகின்றன. நேற்று காலை இப்பள்ளிக்கு வந்த 4 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தாவை அணிந்திருந்தனர். இவர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு, சீருடை அணிந்து...

கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்று, மாணவ, மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. கல்லூரியின் உத்தரவு தங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும் யுஜிசியின் விதிமுறைக்கு முரணானது என்றும், கல்லூரியின் நடவடிக்கையை எதிர்த்து 9 முஸ்லிம் மாணவிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.கடந்த ஜூன் 26-ம் தேதி மாணவிகளின் மனுவை விசாரித்த மும்பை...

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 6-ம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது....

பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்

முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று...

குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா

களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள்,...